பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றிரவு இதுநான்காவது) விழிகளை மூடினேன். நிச்சயம் வரும் தூக்கம், அல்லது சாவு. ஏதோ ஒன்று நன்றாய் வரட்டும் இதற்கு மேலேமரணம் அங்கே இல்லை என்னை வரவேற்பதற்கு மாறாக, தூக்கம், சின்ன சாவு காத்திருந்தது. நான் வெறுப்பது காதலைத்தான் அவனையோ அவளையோ அல்ல. ஒரு துன்பு சாகரத்தை மிதக்க விடுகிற காதலைத்தான் வெறுக்கிறேன் அறையிடம் முணுமுணுத்தேன். அறை கேட்க மறுத்தது எனது புகாரை எதிரொலிக்கவில்லை. அது. சுவர்கள் அந்த அழுகையை, இதற்கு முன்னும் கேட்டிருந்தன. வெறுப்பு, காதலுக்கு விஷமுறிப்பான் ஆகாது என்று அவற்றுக்குத் தெரியும். நான் எழ வேண்டும் வீம்புநடை நடக்கும் ஒவ்வொரு வெற்று நாளையும் தனித்தனியே சந்தித்து துரத்துரத்தவேண்டும். நேரம் நிஜமானது காதல்தான் பொய்யானது. கர்தலுக்குப் பல முகங்கள் கடல்மீது வட்டமிடும் கடற் பறவைகள் அல்லது வசந்த காலப் பூக்களின் தூசு படிந்த தலைகள் எத்தனையோ அத்தனை அக்கறையோடு அவற்றுள்ளே நோக்கினால் உனது முகத்தையே காணலாம் நீ. வறண்ட மேற்குக் காற்றில் நீ குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன் ஒரு "கெளபாய்' தொப்பியை அணிந்திருந்தாய். நீ நிஜம்தான் என்றறிய எனக்கு சிரிப்பு வந்தது. எவ்வளவு நிஜம், சீக்கிரமாக நான் கண்டு பிடித்து விட்டேன் 126