பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வெண்கலமாக, மண்நிறமாக அதே நேரம் மெலிவாக, உறுதியாக, உயரமாக ஆகாயத்திலிருந்து விழுந்த ஒரு துண்டு போலும் அவ்வளவு நீலநிறக் கண்களோடு இருந்தாய். ஒரு வைகறையில் நீலச்சிவப்பு மரங்களுடே பிரம்மாண்டமான காட்சிகளைக் காண என்னை அழைத்துச் சென்றாய் - தேவதைகளுக்கோ அல்லது காதற்சுரங் கொண்ட காதலர் மகிழவோ உரித்தானவை அவை. குதிரையோடு ஆற்றைக் கடப்பதற்கும் பாறை உருண்டு விழும்போது பயப்படாமல் இருப்பதற்கும் கற்றுக் கொடுத்தாய் நீ. இணையாக நாம் சவாரி செய்த - ஒவ்வொரு காலையிலும், மதியத்திலும் இரவிலும் உன்னுடைய நளினமான ஏதோ ஒன்றை எனக்குத் தந்தாய் உனது பரிசுகள் முடிவில்லாதவை. காற்றாலும் வானத்தாலும் பயிற்சி தரப்பட்ட காட்டுமிராண்டிக் காதலன் நீ ஒரு நெருப்புக்கு உயிரூட்டினாய். உன்னை அணிந்து கொள்கிறேன் உனது அடிமை நான் காதல் ஆட்டம் துவக்கப்படுவது, என்னிடத்திலிருந்தல்ல. பெண் பாத்திரம் எனது ஆட்படுத்த முயற்சிக்காமல் ஆட்கொள்ளப்படு வதற்காகக் காத்திருக்க வேண்டும் நான் எனது மார்பின் மீது உனது கைகளைக் குறுக்கே போடுகிறாய் உறக்கத்தில் என்னைச் சுற்றி இறுக்குகிறாய் ஒரு குழந்தை தனதுதாயிடம் அன்பு செலுத்துவது போல எவ்வளவு தூய்மையாக உன்னால் காதலிக்க முடியும் என்று -- நான் நினைவுபடுத்தப் படுகிறேன். கன்னிமை ஏதோ ஒன்றாய் எனக்கு நின்றது 127