பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமிநாயக்கர் நெஞ்சுவலுவை எல்லாம் மேழியில் செலுத்தி மூச்சு விட்டு மூச்சுவிட்டு உழுதார். மண்ணை வகுத்துக் கொண்டுபோன கொளுமுனையில் திம்முரெட்டியின் கவனம். - மண்ணாங்கட்டிகளை மிதித்து ஏறிக்கொண்டு தார்ப்பாச்சலுடன் போய்க் கொண்டிருந்தார் சாமிநாயக்கர். கலப்பை கிர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர் ரென்று சாமிநாயக்கரை கண்டு மிரண்டது. இந்த வருஷம் தரிசுபோடாமல் விதச்சாச்சு. நாத்து விதைச்சிருக்கு. நாத்துச் சோளம். விதைச்சது அரைப்பயிரு முளைச்சிருக்கு. வெயில் முருகி அடிக்கிறது. பச்சப்புள்ளை மாதிரி பயிரு. துணிகருகி வெயிலில் கத்துகிறது. இலை உதிர்த்த மரங்கள் தளுத்து வருகிறது. காலத்தில் விழுந்த ஒரு மழைக்கு செத்துக்கிடந்த காடு அரும்பு கட்டி பச்சை பொங்கி நிற்கிறது. செல்லக்குருவிகள் ஏகமாய் கொண்டாடித் திரிகின்றன. பச்சையைக்கண்டதும் நாலுகால் பட்ட உருப்படிகள் வாட்டம் இல்லாமல் குளூந்தமாதிரி மேய்ச்சல்போடுகிறது. வாலை ஆட்டி ஆட்டி துள்ளல் போடும் கன்னுக்குட்டி. வெயில் ஏற ஏற வாட்டம் கொடுத்திடும். எங்கும் கருகல் வாடைகாடு கருகுவது வாயில்லா சீவன்களுக்கெல்லாம் வருத்தம். பச்சை காஞ்சு வருகிறது. சீவராசிகள் கண்ணுகளுக்கு காடெங்கும் உயிர் வாதையாய் இருக்கு. அனேக காடுகள் அவிஞ்சு கிடக்கு. வருஷத்துக்கு வருஷம் அடியில் நீரோட்டம் மாறுகிறது. அடியில் வெக்கை பொங்கி, வேகிறது. பாளம் பாளமாய் வெடிப்பு. கருப்பு ஆன்மாவேனாத வெயிலில் அண்ணாந்த நிலையில் ஆழ்ந்து கிடக்கு. உடைமரங்கள் தலைவிரித்து முள்ளு முள்ளாய் மூளிக்கோலம் கொண்டு நிற்கிறது. மூளி மரங்களை வெட்டி வெட்டிக் காட்டுக்குள் கரிமூட்டம் யாவாரம் நடக்கு. காட்டுக்குள் பெரிய்ய விட்டத் தராசுகள் கையை விரித்து பாவ புண்ணியம் பாராமல் சமுசாரிகளுக்கு படி அளந்து கொண்டிருக்கிறது. தராசு வைத்து நிறுத்தல் போடும் காடுகளாகிவிட்டன. புகை மண்டுகிறது. மூச்சுவிட முடியாமல் திணறுகிறது. குருமலையில் இருக்கும் இருபது யானைகளை ஏலத்துக்கு விட்டது போல், அரளிப்பாய் இருந்த காட்டு மரங்கள் வஞ்சம் தீர்க்கப்பட்டு, வெட்ட வெளியாய் மலை கிடக்கிறது. எரிக்கலை முளைச்சுக் கிடக்கு. குத்துக் குத்தாய் முள்ளுச் செடிகள் Fo

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/13&oldid=463917" இலிருந்து மீள்விக்கப்பட்டது