பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லை அதன் கீழே எழுகிறத் திண்டுகளைத் தவிர' உனது தலை, மெதுவாக, ஒரு காரியமாகக் கீழிறங்குகிறது அப்போது ஒவ்வொரு வார்த்தையும் முத்தங்களால் - அடிக்கோடிடப்படுகிறது. ஊர்கிற உனது விரல்கள் ரோஜாக் காம்புகளை மெல்ல நெருடுகிறபோது எனது பட்டுக்கூந்தல் மறக்கப்பட்டு விடுகிறது. 'ஜெரேனியம் பூவிதழ் போல இந்தப் பவழக் குமிழ்கள் உனது கோளங்களின் தந்த வெண்மைக்கு மேலே ஏறுகின்றன. " காதல் வேகமாகக் கொத்தியது எனது புலன்கள் தீவிரப்பட்டன மறக்கப்பட்ட ஒரு மார்பு காத்திருக்கும் உனது வாயைக் கண்டுகொண்டு இயல்புணர்வோடு எழுகிறது. பிரியமான வாத்தியத்திடம் விருப்பமாகிற இசைக்கலைஞனைப் போல F30 ஒரு அதிசயமான முன்னுரையை எனது உந்தி உயரும் இடத்தில் மீட்டுகிறாய் நீ. மகிழ்ச்சியின் இசிவினால் நடுங்கினேன் நான். உனது தலை நிமிர்கிறது உனது நா நாபிச்சுழியை வருணிக்கிறது. 'கொத்துமுத்தங்களால் அணி செய்யப்பட வேண்டிய ஒரு முத்துச்சங்கு இது." சூடான உனது அதரம் பிடரியிலிருந்து முதுகுத்தண்டின், இனிய கடைசி நுனிவரை முதுகெலும்பு ஒவ்வொன்றிலும் அடையாளம் பதிக்கிறது. அங்கே, இச்சைமிக்க உனது சேட்டைகளுக்காக ஜோடி ஆட்டுக்குட்டிகள் குதிக்கின்றன. அது பிரியமான சித்ரவதை சொர்க்கத்தின் கீழே நான் எனது சித்ரவதைக்காரனை