பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் முதன்முதலில் புதுக்கவிதையைப் பார்த்துவிட்டு என்ன இதுவா கவிதை என்று புறக்கணித்து மரபுக் கவிதையை வேகமாக எழுதியவர். ஆனால் மேல்நாட்டுப் புதுக்கவிதைகளைப் படித்த பிறகு தாமாகவே மனம் மாறி புதுக்கவிதையில் தீவிரமாக ஈடுபட்டார். தமிழ்நாடு என்ற பத்திரிகையில் 'மண் என்ற தலைப்பில் இவர் முதன்முதலாக எழுதிய புதுக்கவிதை வெளிவந்தது. அறிஞர் அண்ணாதுரை அதைப் பலமுறை படித்துச் சுவைத்து பாராடடினாராம. - சர்ரியலிசம் பற்றி தமிழில் பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதைத் தம் கவிதைகளில் கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் கவிஞர் அப்துல் ரகுமான். கல்லூரியில் படிக்கும்போதே சர்ரியலிச உத்திகளை மரபுக் கவிதைகளில் புகுத்தி எழுதிப் பார்த்தவர். அப்துல் ரகுமானின் கவிதைகள் சோதனை முயற்சிகளின் வெற்றிக் கணிகளே. மரபுக் கவிதையின் இலக்கணங்கள் தெரியாததாலோ அல்லது மரபுக் கவிதையில் தனது கருத்துக்களைச் சொல்ல இயலாமல் போனதாலோ கவிஞர் அப்துல் ரகுமான் புதுக்கவிதையை நோக்கி வரவில்லை. - மாறாக புதுப்புது சோதனை முயற்சிகளில் இறங்கும் இவரது ஆர்வமே புதுக்கவிதைக்கு இவரைச் சொந்தமாக்கியது. மலேசியாவில் புதுக்கவிதையின் வேகத்தில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டுள்ள காலம் இது. - கவிஞரின் வருகை புத்துணர்ச்சியை அளித்து மலேசியத் தமிழ் புதுக்கவிதைத்துறை இன்னொரு காலக்கட்டத்தில் அடியெடுத்து வைக்க உதவும் என்று நம்புகிறேன். - ★ ராஜ: இலக்கணம் இல்லாத கவிதைதான் புதுக்கவிதை என்று சிலர் நினைக்கிறார்கள். இது பற்றி... - ரகுமான்: உதாரணமாக வீடுகளை எடுத்துக் கொள்வோம். எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பெரிய குடும்பங்களுக்கான வீடுகளில் அதிக அறைகள் இருக்கும். எல்லா வசதிகளும் இருக்கும். 133