பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ராஜ: புதுக்கவிதையில்.... ரகுமான்: நுட்பம் அதிகமாக இருக்கும். இந்த புதுக்கவிதை இயக்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்துக்குப் பரவியது. ந.பிச்சமூர்த்தி (தமிழில் முதன் முதலாக புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டவர்) தற்செயலாக புதுக்கவிதை பற்றி அறிந்து அதன் தாக்கத்துக்கு ஆளானார். பிச்சமூர்த்தியிடம் வால்ட் விட்மனின் பாதிப்பு அதிகமாக இருந்தது. - அதனால்தான் அவருடைய புதுக்கவிதை சரியாக அமையவில்லை. அவருக்குப் பின்னால் வந்த புதுக்கவிதைகளின் ஆழமோதுணுக்கமோ பிச்சமூர்த்தியிடம் இருக்கவில்லை. காரணம் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் வால்ட் விட்மன். ஆரம்ப காலமாக இருந்ததால் பிச்சமூர்த்தியின் முயற்சி நமக்கும் புதிதாக இருந்தது. - - இருக்கின்ற கருத்துக்கு மாறானதாக அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக புதுக்கவிதை வளர்ந்தது. உலகப் போருக்குப் பிறகு வெறுப்பு விரக்தியைக் காட்டுவதாக இருந்தது. இந்த உணர்வுகளை எழுத்து பத்திரிகையில் எழுதியவர்கள் அப்படியே இறக்கி வைத்தார்கள். அதுதான் தவறாகப் போய்விட்டது. ஏனென்றால் ஐரோப்பியர்களின் பாதிப்புகள் வேறு. அவர்கள் அளவுக்கு நாம் பாதிக்கப்படாத நிலையில் அந்த உணர்வுகளைக் காட்டுவது பொருத்தம் இல்லையே. அதனால் எழுத்து ஏட்டின் முயற்சிகள் தனித்து வேரூன்ற முடியாமல் போய்விட்டது. ஆனால் மறுபடி (தமிழக) வானம்பாடி காலத்தில் வசன கவிதை உருவம் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏனென்றால் அவர்களுக்குப் புதுக்கவிதைபற்றி அதிகமாகத் தெரியாது. வானம்பாடி குழுவில் இருந்த எல்லா கவிஞர்களுக்கும் சேர்த்துதான் கூறுகிறேன். இப்போது ஓரிருவர் புதுக்கவிதை எழுதுகி றார்களே தவிர தொடக்க காலத்தில் வசன கவிதைதான் எழுதினார்கள். ராஜ: அப்படி என்றால் புதுக்கவிதைக்கு சுமார் 150 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. புதுக்கவிதை என்றவுடன் தமிழில் உருவான காலத்தை மட்டும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது... இல்லையா? ரகுமான்: ஆமாம். நாவல் என்றால் அப்படித்தானே பேசுகிறோம். IᏯ8