பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளெஞ்ச காடுகளில் தளுத்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு நாள் சமுசாரி தொந்தி வாடுகிறது. சாமிநாயக்கர் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, ஊத்துக் கிடங்கில் முங்கி முங்கிக் குளித்தார். செல்லமாய் வளர்த்த விட்டுக் காளையை தண்ணிக்குள் முங்கவைத்து, வைக்கோலை கொண்டு மாறி மாறித் தேய்க்கிறார். இடுப்புத் துண்டை அவுத்து குளித்த மாட்டை துவட்டி விட்டு என்ன மாதிரி ஆயிட்ட... இப்டிஎலும்பும் தோலுமா ஆயிப்போனயே... உன்ன எப்டி வச்சு காப்பாத்தப் போரனோ... என்று கழுத்தை கட்டிக்கொண்டு கொஞ்சினார். மாடு வரண்டு சூம்பிய முகத்தை நீட்டிப் பார்த்தது அவரை. குத்துக் குத்தாய் முள்ளுச்செடிகள். மாடு வாய்வைக்க முடியாமல் முள்ளுகள். மார் மாராக முள்ளுக்காடு. முதுகைக் கிழிக்கிறது. நோஞ்சமாட்டோடு காடெல்லாம் சுற்றி வந்தார் சாவன்னா. காஞ்ச கரடு ஏதாவது கிடைக்குமா இங்கு. வெயில் முறுகி முறுகி மண்ணில் ஈரம் செத்துக் கொண்டிருக்கிறது. நாலு திசைகளில் எங்கு ஓடினாலும் குத்துச் செடியின் நிழலைக் கூட காணவில்லை. நடுக்காட்டில் தாகத்தால் அண்ணாந்து கத்தும் மர்ட்டின் வரண்ட குரல். காட்டு ஒடைகளில் அக்கினி ஒடையாய் அனல் உருண்டு ஒடுகிறது. மாட்டின் தாகக்குரல்கள் வெயிலின் மீது கதறுகின்றன. - மாடு உயிர் செத்து உறங்கி உறங்கி நடக்கிறது. மாடு துள்ளாமல் சமுசாரி உயிர் வச்சு இருக்க மாட்டான். முந்தி அப்படி இல்லை. வாட்டமில்லாமல் பால் குடித்தான் சமுசாரி. புது மாட்டோடு மனசுவிட்டு பேசியபடி சாமிநாயக்கர் கமலை இரைத்துக் கொண்டிருந்தார். வடக்கயறு க்கீய்ய்ய்ய்ய் யென்று வளைந்து அழுதது. தோட்டத்தில் சோளம் கதிர்வாங்கி இருக்கு. குண்டு குண்டாய் கதிரு. சாமிநாயக்கர் தோட்டத்தில் கல்லுப்போல இருக்கு கதிரு. காற்று சுழித்து சுழித்து கதிரை அசைக்கிது. தோட்டத்து கடவுவழியே போன வேல்தேவன் பாளை அருவாளை வைத்து தீட்டிக் கொண்டிருந்தான். என்ன தாத்தா இது சோளக் கருதா.... என்று அருவாளை வைத்து ரெண்டு கதிரை சீவினான். I3