பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ: இத்தனை ஆண்டுகால அனுபவத்தை வைத்து புதுக்கவிதைக்கு இலக்கணம் ஏதும் வகுக்க முடியுமா? அந்த மாதிரி யான முயற்சிகள் நடந்துள்ளதா? ரகுமான்: முடியும். எழுத்து காலத்தில் இருந்தே அத்தகைய முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் திட்டவட்டமாக வரையறுத்து பெரிய புத்தகமாக வரவில்லை. ராஜ: புதுக்கவிதை என்ற பெ யர் எப்படி வந்தது? ரகுமான்: வரலாற்று ரீதியில் பார்த்தால் முதன் முதலில் பிரெஞ்சில் தோன்றியபோது புதுக்கவிதை என்று பெயர் வைக்கப் படவில்லை. எஸ்ரா பவுண்ட் போன்றவர்களின் காலத்தில்தான் நியூவெர்ஸ் என்ற பெயர் உருவாகியது. அதுதான் பின்னால் புதுக் கவிதையாக பெயராகிவிட்டது. தமிழில் இது புதிதாக இருக்கிறது. மரபுக்கு மாறாக இருக்கிறது என்பதால் க.நா.சுப்ரமணியம்தான் புதுக்கவிதை என்று சொல்ல ஆரம்பித்தார். ஆனால் பல பேர் பல பெயர்கள் வைத்தார்கள் அதெல்லாம் நிலைக்கவில்லை. ராஜ: புதுக்கவிதை என்ற பெயர் இன்னும் 500 ஆண்டு கழித்தும் தொடர்ந்து இருக்க முடியுமா? ரகுமான்: இருக்கும். சிறுவயதில் பாப்பா என்று பெயர் வைத்து அழைத்துவிட்டால் பின்னால் எவ்வளவு பெரியவளாக வளர்ந்தாலும் பாப்பா தானே, அது மாதிரிதான். ராஜ: பாரதி, பாரதிதாசன்போன்றவர்கள் கவிதை உலகில் பெரும் சாதனை புரிந்திருக்கிறார்கள். புதுக்கவிதை தமிழகத்தில் தலையெடுத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. புதிய முயற்சி என்ற வகையில் பெரும் வரவேற்பையும் பரபரப்பையும் பெற்றுவிட்ட போதிலும் பாரதி, பாரதிதாசன் அளவுக்கு அல்லது மற்றமொழிகளுடன் போட்டியிடும் அளவுக்கு காவியமோ, சாதனையோ ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா? - ரகுமான்: பாரதியும் பாரதிதாசனும் பெயர் பிரபலமானதற்கு அவர்களுடைய கவிதைகள் மட்டுமே காரணம் அல்ல. இரண்டு பேரின் காலத்திலும் மக்கள் உணர்ச்சிபூர்வமாக ஈடுபடுகின்ற பெரும் இயக்கங்கள் நடைபெற்றன. பாரதியார் காலத்தில் சுதந்திரப் போராட்டமும் பாரதிதாசன் காலத்தில் திராவிட இயக்கமும் நடைபெற்றன. அவர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் மக்களின்

  1. 39