பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போராட்டத்தைப் பற்றி எழுதினார்கள். இதுதான் அவர்கள் கவிதை பிரபலமானதற்கு அடிப்படைக் காரணம். புதுக்கவிதையின் காலத்தில் அத்தகைய போராட்டம் இல்லை. இருந்திருந்தால் இப்போது எழுதப்படுகிற கவிதை உடனே நாடு முழுதும் பரவும். விடுதலையின் விளைவுகளை, சமுதாயத்தை, அரசியலை விமர்சிப்பதுதான் இப்போது புதுக்கவிதை செய்யக்கூடியது. அதை புதுக்கவிஞர்கள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். பாரதி, பாரதிதாசன் செய்யாமல் விட்டதை அவர்கள் செய்து வருகிறார்கள். காவியம் என்று சொன்னீர்கள். காவியத்துக்கு எதிரானது புதுக்கவிதை. அவ்வப்போது ஏற்படுகிற உணர்ச்சிக் கொந்தளிப்பைச் செய்வதுதான் புதுக்கவிதை. உட்கார்ந்து பெரும் காவியம் எழுதுவதே செயற்கைதான். இது காவியக்காலம் அல்ல. அமைதியாக உட்கார்ந்து காவியம் படிக்கிற மனநிலை உள்ள சமுதாயம் இது இல்லை. காவியம் உருவாவதற்கு இப்போது வாய்ப்பே இல்லை. புதுக்கவிதையின் இயல்பே இதற்கு எதிரானது. சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். குறுங் காவியம் படைக்க முயன்று வருகிறார்கள். ஆனால் புதுக்கவிதையின் அடிப்படைத் தத்துவத்துக்கு அது எதிரானது. - w: - ராஜ: இப்போது தமிழகத்தில் உள்ள புதுக் கவிஞர்களைப்பற்றி எதுவும் சொல்ல முடியுமா? : - ரகுமான்: சமகாலத்து கவிஞர்கள் பற்றி கருத்துரைப்பது. அவ்வளவு சரியல்ல. ஆனால் எனக்கென்று ஒரு கருத்து இருக்கிறது அல்லவா? என்னைப் பொறுத்தவரையில் கவிதையில் அதிக நுட்பம் இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்துவேன். புதுக்கவிதை என்று தீவிரமாக யோசித்து எழுதுபவர்கள் என்று சொல்வது என்றால் மூன்று பேரைத்தான் சொல்லலாம். அபி, தர்மு சிவராமன், ஞானக் கூத்தன். புதுக்கவிதை என்ற முறையில் செறிவாகப் படைப்பவர்கள் இவர்கள்தான். இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம். 140