பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்கள் எல்லாம் வசன கவிதைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிற்பி, மீரா, புவியரசு, மேத்தா, காமராசன், இவர்களுடைய கவிதைகளில் சில புதுக்கவிதையாக அமைந்திருக்கும். ஆனால் பொதுவாகப் பார்க்கும் போது வசன கவிதை பாணியில் எழுதுகிறார்கள். ராஜ: வைரமுத்துவுக்கு இதில் எந்த இடத்தைக் கொடுக்கலாம்? ரகுமான்: வசன கவிதை எழுதுபவர்களின் பட்டியலில் மிகவும் லேட்டாக வந்து சேர்ந்தவர் வைரமுத்து. சினிமாவில் இடம் பெற்றதால் அவர் பெயர் பரவி விட்டது. இலக்கியத்துறை மட்டும் என்று எடுத்துக்கொண்டால் இந்த பாணியில் நிறையப் பேர் ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். ராஜ: வைரமுத்துவின் சொல்லாற்றல், கையாளும் முறை வித்தியாசமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ரகுமான்: இல்லை. எல்லாம் புதுக்கவிதையாளர் செய்ததுதான் ராஜ: புதுக்கவிதைக்கு இசை அமைக்க முடியுமா? ரகுமான்: இசைக்கே மாறானது அல்லவா? எதையும் சாராமல் தனியாக சுதந்திரமாக நிற்கவேண்டும் என்பதற்காகத்தானே ஃபிரீவெர்ஸ் என்று வைத்தார்கள். ராஜ: நீங்கள் மீரா போன்றவர்கள் திரைப்பட உலகத்தில் ஈடுபா காட்டாதது ஏன்? - ரகுமான்: திரைபடத்தில் நுழைய வேண்டும் என்று சிலருக்கு நோக்கம் உண்டு. எனக்கும் மீராவுக்கும் அந்த எண்ணம் இல்லை. கண்ணதாசன் பட உலகுக்கு வருவதற்கு முன்பே எனக்கு வாய்ப்பு வந்தது. - தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தைத் தயாரித்த ஏ.கே.வேலன் அந்த வாய்ப்பை அளித்தார். மறைமலை அடிகள் வில்லுப்பாட்டு என்று ஒன்று போட்டோம். நான்தான் எழுதினேன். பாட்டைப் பார்த்துவிட்டு சென்னைக்கு என்னை வரச் சொன்னார். ஆனால் சினிமா மோகம் எனக்கு இருக்கவில்லை. Δ நன்றி: தமிழ் ஓசை 26-2–84. I41