பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீக்ரோக்களின் உள்ளத்தில் வெறி ஏற்றிக் காட்டாற்று வெள்ளமாய்க் கவிதைகள் பாடினான். கருப்பென்றால் அழகென்றும், கருமையில் தான் வலிமையெனறும் பாமாலை புனைந்தான். அநீதியைத் தன் கவிதையில் சாடினான். அவலங்களைப் பாடினான். லாங்ஸ்டன் ஹியூஸ் போர்க் குணம் படைத்தவன். பேனா முனையில் போராடும் சொல்லேர் உழவன். அமெரிக்க நீக்ரோக்கள் அனுபவித்த சமூக அநீதியை, பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தன் கவிதைகளில் சித்தரித்தான். அமெரிக்கரின் இன விரோதக் கோட் பாட்டை மிகக் கடுமையாகச் சாடினான். கருப்பர்களின் தனித் தன்மையை, கலாச்சாரத்தை, இன உணர்வைப் போற்றுகிறான். நீக்ரோ மக்களது உள்ளத்தில் மறைந்து கிடக்கும் கலைஉணர்வை, ஆற்றலை அவர்களே உணரும்படி செய்தான். பசியை அறிந்தவன் பாதுகாப்பை அறியாதவன். கொடுமையை அனுபவித்தவன் நீக்ரோ மக்களுக்கு வெள்ளை முதலாளி இழைத்த கொடுமையை கருப்பர் அனுபவித்த இழிவை, அவர்களது சமூகப் பொருளாதாரத தாழ் நிலையை உணர்ந்தவன். அந்நிய மண்ணில் அநீதியைப் பொறுத்துக் கொண்டு ப்கைச் சூழ்நிலையில் வாழ்ந்த நீக்ரோ மக்களது மன உறுதியைப் பாடினான். மக்களின் வறுமையை, அச்ச உணர்வை, காவலர் இழைத்த அடக்கு முறையை, துயரத்தின் காரணமாக உடலை விற்க முன்வந்த நீக்ரோ மகளிரின் இழிநிலையைப் பாடினான். தன் கவிதையால் நீக்ரோக்களின் இரத்த நாளங்களில் சூடு ஏற்றினான். ஒளி பொருந்திய தாயகமாம் ஆப்ரிக்க நாட்டிற்குத்தப்பிச் செல்ல இயலாது, அமெரிக்க நகரங்களில் கைதிபோல் அடைபட்டு உணர்ச்சியற்ற மரக் கட்டையாய் உழைத்து உருக்குலைந்த நீக்ரோ மக்களை எண்ணி இதயம் குமுறினான். வெள்ளையன் வீட்டிலே உணவைப் பரிமாறியபின் தன் இனத்தவர் கொல்லைப்புறம் சென்று குந்திக் கிடக்கும் நிலைமை மாறி, வெள்ளையனோடு ஒரே இருக்கையில் அமர்ந்து உணவு உண்ணும் நாள் வெகு தூரத்தில் இல்லை என உணர்ந்தான். வெள்ளையன் தன் போக்கை மாற்றிக் கொள்ளாதவரை, அவனது வன்முறையை வன்முறையால் எதிர்த்து நில் என்றான். தன் இனத்தைப் பாடிய கவிஞன், உலக உழைப்பாளியைப் பாடும் வர்க்கக் கவிஞனாக மாறினான். உழைக்கும் வர்க்கத்தைப் பாடினான். உலகத் தொழிலாளர்கள் ஒன்று படுக எனப் பாடினான் 143