பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீக்ரோக்களின் வறுமையை எண்ணி இதயம் துடிக்கிறான் கவிஞன். இந்தப்பஞ்சைகள் மீது நமக்குப் பரிதாபம் ஏற்படுகின்றது. கொப்பரையைப் பார்க்கின்றேன். காலியாக இருக்கிறது. ரொட்டிப் பெட்டியைப் பார்க்கின்றேன். காலியாக இருக்கிறது அங்கே ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஈயைத்தவிர வேறொன்று மில்லை உலை வைக்கலாம். ஆனால் அடுப்பெரிக்க விறகு இல்லை சுற்றிலும் பார்க்கின்றேன் - துணிப்பெட்டி இருந்த இடம் காலியாக இருக்கிறது துணி தொங்கும் கயிறு வெறுமனே இருக்கிறது. காலை முதல் பாடுபட்டுக் கதிர் அறுத்துக் கஞ்சியின்றி வாடுவோரைப் பாடுகின்றான் ஹியூஸ், இரவு வருகிறது. வயிறு காய்கின்றது. வறுமைத் தீயில் குளிர்காய்கின்றான் ஏழை நீக்ரோ, குடும்பமே வறுமையில் வாடுகின்றது. ஆனால் அரசு வாளா விருக்கின்றது. மக்கள் கண்ணிரை அரசு துடைக்கவில்லை. கஞ்சித் தொட்டி காலி தட்டுமுட்டுச் சாமான்களில்லை ~~ ....... அப்பா, இங்கே என்ன விஷயம்) ரூஸ்வெல்டிற்காகக் காத்திருக்கிறோம், மகனே ரூஸ்வெல்டிற்காகக் காத்திருக்கிறோம். வீட்டு வாடகை கொடுக்கவில்லை மின் விளக்கு எரியவில்லை அம்மா, இது என்னம்மா? r ரூஸ்வெல்டிற்காகக் காத்திருக்கிறோம், மகனே ரூஸ்வெல்டிற்காகக் காத்திருக்கிறோம். தங்கைக்குக் காய்ச்சல் டாக்டர் வரமாட்டார் அவருக்குப் பணம் கொடுக்க எங்களால் இயலாது - அப்பா அம்மா காத்திருக்கின்றனர் ரூஸ்வெல்டிற்காகக் காத்திருக்கின்றனர் ரூஸ்வெல்டிற்காகக் காத்திருக்கின்றனர். 146