பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டோம் குளிர் காற்று அடிக்கின்றது போவதற்கு இடமில்லை பொங்கி எழுந்தார் அப்பா. பொறுக்கமுடியாது ரூஸ்வெல்ட் பொறுக்கமுடியாது ரூஸ்வெல்ட் வேலை கிடைக்கவில்லை எலும்புத் துண்டு கிடைக்கவில்லை மக்களெல்லாம் பட்டினியால் ரூஸ்வெல்ட் உன் வார்த்தையை நம்ப முடியாது நீ என்ன சொல்கிறாய்? ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து, வேலை கொடு, சோறு கொடு என்று கூறுவது போல் இருக்கிறது. அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டனம் செய்யும் ஹியூஸின் கம்பீரமான குரவை இங்கு கேட்கின்றோம். சட்டத்தின் முன் அனைவரும் ஒன்று என்ற சமநீதி நீக்ரோ மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி நீக்ரோ மக்களை அடித்துச் சித்ரவதை செய்யும் போலீஸ் கொடுமையைக் கவிஞன் கடுமையாக விமர்சிக்கின்றான். சுற்றிலும் பார்க்கின்றேன் சட்டத்தின் பாதுகாவலன் அதோ, வருகின்றான். என்னை நோக்கி வருகின்றான் அடித்துக் கொல்லுவான் என்னை. ஆண்டவனே, அந்த மனிதனிடமிருந்து என்னைக் காப்பாற்று, ------------- என்னை அவன் சட்டினியாக்க விடாமல், என்னைப் பாதுகாக்க ஆண்டவன் ஓடிவரவில்லை. சட்டத்தின் பாதுகாவலன் என்னை நையப் புடைக்கின்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை போலீஸின் மிருகத்தனத்திலிருந்து என்னை ஏன் ஆண்டவன் காப்பாற்றவில்லை? 147