பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாவன்னாகமலையில் இருந்து கத்தினார். 'என்னடா... அருவாள வச்சு பதம் பாக்க... கோட்டிப்பயலே... கல்லா இருக்குன்னு பாத்தியா... நம்ம கருது ஆள மெரட்டுமுடா, ' - "தாத்தா நீயி ஒன்னுன்னா ரெண்டும்பியே! போடா...போ... நம்ம தோட்டத்து கரம்பை போட்ட போடு பாத்துக்க. சிந்தாம தின்னு...' பொக்கை ஊதி பால் சோளத்தை கடவாயில் ஏவியபடி நடந்து போகிறான் வேலு. . நம்ம கெழட்டு எளவு என்னமாதிரியா துள்ளுது... எளவட்டப் புள்ள மாதிரி... திகைப்புடன் பனங்காட்டை பார்த்துப் போனான் வேல்தேவன். சோளப் பயிரு இடுப்புக்கு மேல் வளந்திட்டாஅதுக்கு ஒருதுள்ளு துள்ளுவார் சாவன்னா. ரெண்டுச்சாண் வளர்ந்த மாதிரி சோள நாத்துக்குள் எக்கி எக்கி நடந்தார். தங்கமான தோட்டம். பயிர்பச்சைகள் கண்ணுக்கு குளிர்ச்சி தருது. கண்ணில் ஈரம் எப்பவும் வாடாமல் இரக்கம் கசியது. பயிர் பச்சை செடி கொடி எல்லாம் மனசுவிட்டு தளுக்கும். சாவன்னா வீட்டுப் பந்தலில் கெங்கம்மா மனசு போல அவரைக்கொடி ஊர் சுற்றிப் படரும். - காடி வண்டிக்கு நாலு வண்டி சோளம் விளைச்சல் ஆகி அடுக்கி இருக்கு வீட்டில். யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் ஆறுபடி சோளத்தை அளந்து கொடுப்பாள் கெங்கம்மா. வள்ளிக்குளத்து வம்சம். ராவணக் கோட்டை மாதிரி வாழ்ந்த வீட்டில் பிறந்தவள். தானிய மூடை களுக்கு நடுவில் குத்துவிளக்காய் எரிகிறாள் கெங்கம்மா. மதகிரி கட்டில்ல கொர்ர்ர் கொர்ர்ரென்று குறட்டை போட்டு உறங்குகிறாள் கெங்கம்மா. களங்கமில்லாத உறக்கம். ஒ கெங்கம்மா... கெங்கம்மா ரெய்யி... என்று கெங்கம்மாளை உசுப்பி ரகசியமாய் கூப்பிட்டு வீட்டுக் கூரையில் செல்லக் குருவிகள் சலம்புவதைக் காட்டி கெக்கே... கெக்கே... என்று வெத்தலை எச்சி மூஞ்சியில் தெறிக்க கொஞ்சுகிறார் கெங்கம்மாளை. 14