பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளைலாபம் அடிக்கும் முதலாளியைப் பார்த்துக் கொக்கரிக்கின்றான் கவிஞன். அவன் எழுத்தில் கோபக் கனல் வீசுகின்றது. குண்டாந்தடிகள் தாக்கிய போதும் குண்டுகள் நெஞ்சைப் பிளந்தபோதும் அஞ்சாத மக்கள்சாதி மக்கள் சக்தி. மக்களின் புரட்சி மூலம்தான் இன்றைய சமுதாயத்தில் நிலவுகின்ற சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகட்கு சாவுமணி அடிக்க இயலும் என்ற உறுதியான எண்ணம் படைத்தவன் ஹியூஸ். புரட்சியை வரவேற்கின்றான். புரட்சியே காலை வணக்கம் என்னுடைய நண்பர்களில் - நீதான் மிக உயர்ந்தவன் புரட்சியே, சிறிது செவி கொடு நாங்கள் ஒன்று பட்டவர்கள் அனைத்தும் எங்களுக்குச் சொந்தமே - தொழிற்கூடங்கள், வெடிமருந்துப் பட்டறைகள், வீடுகள், கப்பல்கள், புகை வண்டிப்பாதைகள், காடுகள், கழனிகள், கனி உதிர்ச் சோலைகள் எல்லாம் உழைப்பவர் உடமையே. 151