பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாவன்னா கையை நீட்டி அவனைப் பிடிக்க ஓடிவந்தார். வேலு வீட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டான். சாவன்னா வீட்டுக்குள் செல்லக் குருவிகள் சலம்புகின்றன. வீட்டை சுற்றி ஒன்னை ஒன்னு புர்ர்ர்ர்ர்ர் ரென்று விரட்டுகின்றன. சாவன்னாவுக்கு மாட்டை கண்டால் விழுந்து விழுந்து கொஞ்சனும். மாட்டுக்குப் பிரியம். வண்டியோட்டப் பிரியம். கம்புக்கூட்டில் குடையை மடக்கிப் பிடித்தபடி மாடுபிடிக்கப் போனார் சாமிநாயக்கர். 'அடே ராசா... ங்ங்ப்பா... என் வலது கை பெலம் நீ தாண்டா வேலு... சாதி மறவன்னாலும் சாமிநாயக்கன் பேரன்தான்டா நீயி. வாடா போவம். கழுகு மலை சந்தைக்கி...' என்று வேலுத்தேவன் தோளில் கையை போட்டுக்கொண்டு புறப்பட்டார். ஊடுகாட்டுப் பாதைகளில் தாத்தாவும் பேரனும் செல்லம் கொஞ்சிக் கொஞ்சி உருகினார்கள். ஊர் ஊரா போய் ஒத்தை மாட்டுக்கு சோடி தேடினார்கள். எங்கயும் அகப்படலை. ஊரான்மாட்டை எல்லாம் பல்லைப்புடிச்சுப் பார்த்தான் வேலுத்தேவன். என்னடா... முதுகுப்பூசை வேணுமா... அடவேலு... உன் மண்டக் கிரித்திரியத்த கொஞ்சம் மடக்கி வையிடா.... ' என்றார். மாட்டுக் கழுத்தை தடவிதடவி முகத்தோடு முகம் உரசி. 'சாதுக்குணம் தானா... நீயி... என்று மாட்டுக் காதைக் கடித்தார். மாடு தலையை ஆட்டியது. மாட்டுத் தரகன் பழுப்புநிறக் குடைக்குள் அருவாளும் கையுமாக வந்தான். வெத்தலையத் தடவித் தடவி சாமிநாயக்கரை வளைச்சுப் பிடித்தான். சாவன்னா பல ஊர் தண்ணி கண்ட கை. களிமண்ணா வழுக்கும் குணம். கடோர்க் கொம்பன். சுழி மாட்டக் கண்டதும் ஒடி ஒளிந்தார் சாவன்னா. எதற்கும் நம்ம வேலு இருக்கான். சமய சந்தர்ப்பத்துக்கு கையில் அருவாளை வைத்திருக்கான். அவனைக் கிண்டினார். 'அட... வேலு.... நல்லதுக்காலே. இப்பிடி... இரும்பைத் தூக்கிக்கிட்டு திரியிதே... நாஞ் சொல்ரன் கேளுடா...' I6