பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேலு முகத்தை திருப்பிக் கொண்டு மாட்டு முதுகுக்குப் பின்னால் நின்றான். மாட்டை சுத்தி கூட்டம் கூடியது. ரெண்டு இடுப்பு ஒடிந்த சமுசாரிகள் பெறங்கையை கட்டிக்கொண்டு குனிந்து உற்றுப் பார்த்தார்கள் மாட்டை. அவர்கள் முதுகைதட்டி என்னய்யா நீங்க சம்சாரி தானா... ஊக்கமா... இருங்க... என்ன குடி மூழிப்போச்சுன்னு. மனசு லொங்கு ரீக, சுதாரிப்பா இருங்கையா... என்றார் சாவன்னா.. ஒரே சிரிப்பாணிக்கூத்து. கூட்டம் வயிறு வலிக்கச் சிரித்தது. 'சாமிநாயக்கர் புடிச்ச மாட்டுக்கு கொப்புக்கட்டு என்ன சைசு. அடேயப்பா. கிளிக்கொம்பு.... என்னமா கொம்ப ஆட்டுது பாரு... கூட்டம் உருகியது. அந்த ஊர் சம்சாரி இன்னும் கொம்புக் கட்டை பார்த்து மயங்கிக்கிடக்கிறான். சாவன்னா விழுந்து விழுந்து சிரித்தார். மாடு கொம்பை ஆட்டி ஆட்டி மயக்கியது. வேல்தேவன் மாட்டை பத்திக் கொண்டு போகிறான். சாவன்னா குடைக்கம்புடன் பின் தொடர்ந்தார். ஊரின் எல்லைக்கு அப்பால் கதிரடிக்கிற பொட்டைக் களத்தின் விளிம்புகளுக்கு அடியில் நாயக்கமார்கள் காலடியில் விழுந்து கிடக்கிறது சக்கிலியக்குடி, கம்மந்தட்டை நெரசலுக்குள் புஸ்பவதியான சக்கிலியப்புள்ளை ஈஸ்வரியின் தலை தெரிகிறது. சண்முகம் மகள் ஈஸ்வரிக்கு சடங்கு வைபோகம். ஆட்டக்காரன் சண்முகம் சாராய நெடி பறக்க ஊதுற நாயணத்தில் ஊரில் இல்லாத சங்கீதம் கணைக்கிறது. துவைக்கிற கல்லுக்கடியில் சங்கீத மிசைக்கும் தவளைக்கு இணையாக நாயனகாரன் சண்முகத்தின் நாயனம் நூறு நூறு காலமாகி நாதம் ஏறி ஏறிச் சுற்றுகிறது. பச்சைக்கொடி ஈசுவரிப்புள்ளை மனசு தாங்கி வாத்தியம் விம்முகிறது. களைக்குப்போகிற சக்கிலியப் பொம்பளைகள் காட்டுக்குப் போகவில்லை. சாதிகெட்ட சனங்களுக்கு கொண்டாட்டம். ஈசுவரியைச் சுற்றி கூட்டம். 'சக்கிலியப் புள்ளை சமஞ்சிட்டாளா.... போடு சக்கே... என்று நாயக்கமார் கூட்டம் எளக்காரமாய் சிரிக்கிறது. R8