பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனாதி மழைக்கு குறி உண்டாவது போல நாயணத்தில் தவளை களின் வாத்தியம் திரண்டு திரண்டு உயருகிறது. ஆல மரத்து இலைக் கூட்டம் சரசரக்கிறது. மரங்களில் உரசல். பேயாட்டம் போடுகிறது மரங்கள். உப்பாங்காத்து அடித்து வீசி மோடங்கள் பரிப்போல சிதறி ஒடுகிறது. மூலைக்கி ரெண்டு தெளித்தது. மேகம் ஏமாத்துது, படுத்துவிட்டது மேகங்கள். மேகங்களை எழுப்ப வேண்டும். மண்ணை எழுப்பி அடிக்க வேண்டும். அவ்வளவு தெம்பு இருந்தது. ஊக்கம் இருந்தது. இன்னைக்கு அப்படி இல்லை. 女 - சாமிநாயக்கர் இன்னும் ஆலமரத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். - துணைக்கு யாரும் இல்லாத அனாதையைப்போல் தோன்றிய ஆலமரத்தின் ஆழ்ந்த துயரத்துடன், விழுதுகளில் சாய்ந்த இருள் கவிந்து வருவதைப் பார்த்து நிற்கிறார். சாவன்னாவுக்கு நாதியில்லை. ஒண்டிக்கட்டை. பத்து ஏக்கர் புஞ்சையை பொறிச்சு வாயில போட்டாச்சு. இருப்பது ஒன்றரை ஏக்கர். செல்லமாய் வளர்ந்த மாடுகள் கண்தெரியாத தூரத்துக்குப் போய்விட்டன. சொந்த கலப்பை உறங்குகிறது. திரேதாயுகத்துக் கலப்பைகள் தொழுவில் சாத்தி இருக்கிறது. கலப்பைகள் மூச்சுத் திணறும், கிர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர் ரென்ற அவல ஒலிகள். சமுசாரிகள் அழுத்து உறங்குகிறார்கள். நிச்சலனமான ராத்திரி மரங்களில் காற்று உரசுகிறது, இலைகளின் முனங்களுடன். சாமிநாயக்கர் புரண்டு புரண்டு படுத்தார். திருனையில் கெங்கம்மா ளோடு படுத்துக் கிடந்த ஞாபகங்கள், கோலாகல வாழ்வைவிட்டு மறைந்துபோன கெங்கம்மா. கெங்கம்மா இருந்தசமயம், குருமலை தடுத்து இறக்கிய ராத்திரி மோடங்கள். அடமழை கொட்டிய ஈரநாட்களில் சாம்பல் பழுப்பான இரவு. தரை எல்லாம் நீரூத்து அடித்தது. பொத்திக்கொள்ள போர்வை இல்லை. உழுதுவிதைத்த மண்ணுடன் கெங்கம்மாளை ஈண்டிக் கிடந்த மங்கல் கலங்கலான சாமம். அரிக்கேன் லாந்தரில் மஞ்சள் கரைந்த ஒளி தகிக்கிறது. அடி நெஞ்சில் இச்சை கலந்த உயிர் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/21&oldid=463925" இலிருந்து மீள்விக்கப்பட்டது