பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எங்கும் காரிருள் சூழ்ந்து மூடிவிட்டது கிராமத்தை. ஊருக்குள்ளே மையிருட்டு. அரக்கு நிறத்தில் லாந்தர் விளக்கு கசிகிறது. சாவன்னா திரியைத் தூண்டிவிட்டு வீட்டுக்குள் நோட்டம் பார்த்தார். ஒன்று விடாமல் காலியாகக்கிடந்த எல்லா இடங்களிலும் இருட்டு புகுந்து விட்டது. அடைக்கோழியைப் போல் அடைந்து கிடக்கிறது இருட்டு. . ஏதாவது சத்தம் கேட்காதா என்று காது கொடுத்துக் கேட்டார் சாவன்னா. குழந்தை அழுகிற சத்தம் கூட இல்லை. இருட்டு இலைகளுக்கு அடியில் பட்சி ஒன்று விசிலடிக்கிறது. அனேகமாய் விடிந்து விடும். பளாரென்று விடிய வெள்ளை வேனில் சொசைட்டி கடன்காரன் இறங்கி இருந்தான் ஊருக்குள். வீட்டைச் சுத்தி நிக்காங்க சட்டி போலீஸ்காரங்கள். ரிஸர்வ் பார்ட்டி அரட்டுகிறது ஊரை. கூட்டம் கசங்குகிறது. சாவன்னா கைத்தடிக்கம்பை ரொம்ப விறைப்பா புடித்துக் கொண்டு வந்தார். வகுறு வத்திப்போன சம்சாரி வீட்டில் திருவிழாக் கூட்டமாய் நிற்கிறது ரிஸ்ர்வ் பார்ட்டி. 'என்னய்யா... இங்க ஒரு திருழா நடக்கா... நீங்க ஊட கூடி பானை சட்டிய பெறக்க வந்திகளா... எப்பிடி பூமி செழிச்சிருக்கு... போட்ட விதை மொளைக்காம கெடக்கு. லத்திக் கம்பை காட்டி காட்டை எழுப்ப வந்திகளாய்யா... எங்க இருக்கு துரோகம். இங்கெ இருக்கு. ஊட கூடி வெள்ளம் வந்த மாதிரி காக்கி சட்டைகள் வர்சிக்க நிக்கிதே... சம்சாரிக்கு இந்த எடஞ்சலாய்யா...' சாமிநாயக்கருக்கு திண்டு முழுங்குன மாதிரி சஞ்சலம். வாசலுக்கு குறுக்க போய் கைத்தடியை தடுப்புச் சுவராய் மறித்து நின்றார். - சாமிநாயக்கர் மேல் விசாரணை கமிஷன் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தார்கள் சட்டம் தெரிந்த அதிகாரிகள். 1954ஆம் வருஷத்திய53வது தமிழ்நாடு சட்டத்தின் 73வது பிரிவின் கீழ் விசாரணை. - 32