பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வது பிரதிவாதி செல்லையா ஆசாரி ஊரில் இல்லாததாலும் போன இடம் தெரியாததாலும் மேல்படியார் வீடு, தெற்கே பார்த்த ஒட்டடுக்கு வீட்டு தட்டிக் கதவில் ஒட்டி சம்மன் சாரி செய்யப்பட்டது. - மேல்படி பிரதிவாதிகள் (1)(2) ல் சாமிநாயக்கர் நேரில் எமது முன்பு ஆஜராகியும் பிரதிவாதி (2) செல்லையா ஆசாரி நேரில் ஆஜராகாமல் இருக்கும் பட்சத்தில் விசாரணை. 1985 - ஆம் வருஷம் ஜனவரி மாதம் 2-ஆம் தேதி காலை 10-00 மணியளவில் கூடிய விசேச நீதிமன்றத்தின் பகிரங்க விசாரணை நடவடிக்கைகள்: ஆஜர்: நீதிபதி மேதகு ஐசக் பாண்டியன் M.A., B.L.,மற்றும் 5 பார்வையாளர்களும் கோபால் அய்யங்கார் B.A., B.L., கணபதியா பிள்ளை B.A., B.L., குமாரசாமி முதலியார் B.A., B.L., ஒன்பது ஜூனியர் வக்கீல்களும் பிரதிவாதிகள்: (1) சாமிநாயக்கர், வாதி. ஆனந்த கிருஷ்ணன் இத்யாதி இத்யாதிகள்: - சாமிநாயக்கர் கோர்ட் வாசலில் நின்றிருந்தார். ஈரக்குலை பதறியது. குடைக் கம்பை வைத்துத் தரையில் கோடு கிழித்துக் கொண்டிருந்தார். பெசல் கோர்ட்டில் ஏகப்பட்ட கூட்டம். கவுன் போட்ட வக்கீல்மார்கள் இருள் அடிச்சமாதிரி சிரிக்கிறார்கள். கோர்ட் சுவர் அலறியது. வெள்ளைக்காரன் காலத்து கல் தூண்கள்; ஜன்னல்கள்; கருப்புக் கதவுகள்; கருப்புக் கோட்டுகள்; நீள வராண்டா, வராண்டாவைப் பார்க்க ஜெயில் மாதிரி இருக்கு. வராண்டாவில் சிகப்பு டவாலி போட்ட வெத்தலை குதப்பிய தடியன் விழுந்து விழுந்து கத்துகிறான். கிணத்துக் குரல். பேர்கள் ஒப்பிக்கப் படுகிறது. கையில் விலங்கு பூட்டிய இளவட்டங்கள் சிரிக்கிறார்கள். என்ன தாவா நடக்கோ. காலம் எப்பிடி எப்பிடியோ போகுது. வங்கொலை செய்த வேல்த்தேவனுக்கு எதிரா சாட்சி சொன்னவன் கீழக் காட்டில் விரட்டி விரட்டி செத்தான். பொம்பளைகள் குனிஞ்சு களை எடுத்துக்கிட்டு இருக்கு. சங்கை அறுத்திட்டான். திகில் பறக்க அருவாளில் ரத்தம் வடிந்தது. சாமிநாயக்கர் கமலை இறைத்துக் கொண்டிருந்தார். வாய்க்கால் தண்ணியில் அருவாளை கழுவிக்கிட்டு இருக்கான் வேல்த்தேவன். கழுவக் கழுவ ரத்தம். வாய்க்கால் தண்ணியில் சளப்சளப்பென்று 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/25&oldid=463930" இலிருந்து மீள்விக்கப்பட்டது