பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேலு நடந்துபோகிறான். சாமி நாயக்கரை கிணத்துக்குரல் கூப்பிட்ட சத்தம். குலைபதறியது. துண்டை அவுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஓடினார். கோர்ட் வராண்டா மறித்தது. கூண்டுக்குள் சாமிநாயக்கர் ஒடுங்க நடுங்க நின்றார். குளிர் காச்சல் ஆட்டுது. வடக்க பார்த்து நின்றார். 'ஏ கெழவா... இங்கிட்டு திரும்பு. இப்பிடித் திரும்பு. உன் மூஞ்சிய பாப்பம்... ' கிழக்காமல் இருந்த பீடத்தின் மேல் கருப்புக் கோட்டு சாமிநாயக்கரைப் பார்த்துச் சிரித்தது. சாமிநாயக்கர் நடுங்கியபடி கும்பிடுபோட்டார். ஒரே கருப்பு அம்பலமாய் இருக்கு கோட்டு மிரட்டுது ஆளை. பனை உயரத்துக்கு வளர்ந்த கோர்ட் கிளார்க்கு சோடாப்புட்டிக் கண்ணாடி வழியே சாமிநாயக்கரை உற்றுப் பார்த்தான். புஸ்தகத்தில் சத்தியம் வாங்கிவிட்டு அமர்ந்தான். கருப்புக்கோட்டு சாமிநாயக்கரே நீரு கடன்வாங்கினது உண்மைதானா? ஆமாய்யா. ஆமா...' 'உம்மீது ஏற்கெனவே டிக்ரி பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதை ஒத்துக் கொள்கிறீரா...' . - சாமிநாயக்கர் பதறியபடி மரச்சட்டத்தில் சாய்ந்து நின்றார். யோவ் பெரியவரே... கூசாம பதில் சொல்லு' பீடத்திலிருந்து குரல். 'எசமான்... எம்பேர்ல டிக்கிரியா. இல்ல எசமா... நான் வாங்குனது நூத்தம்பது ரூவா. சமுத்திரமா பெருக்கி வச்சிருக்காக, எசமா, பருத்தி மாசூலுக்கு வாங்குனது. அன்னயில் இருந்தே காடு அவிஞ்சு கெடக்கு. மழை பேயலை. நான் எங்கேபோயி முட்ட...' ‘சாமி நாயக்கரே... கோர்ட்டை அவமதித்துப் பேசக்கூடாது. அவமதிக்கும் படியாக நடந்த குற்றம் உம்மீது பதிவாகி உள்ளது. சம்மனை கிழித்துப் போட்டிருக்கிறீர்.... உம்மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட் விரும்புகிறது....' சாமிநாயக்கர் பவ்யமாகச் சிரித்தார். 'என்னமோ ஏதோன்னு கிழிச்சுப் போட்டேன். எனக்கு தன்மதி இல்லை எசமான்....” 25