பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோர்ட் சிரித்தது, ஜன்னல்கள் உற்றுப்பார்த்தன. நீர்சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஜப்தி செய்ய வந்த இடத்தில் அதிகாரிகளை மறித்தது உண்மையா....' 'எல்லாம் அருள் வாங்கிப் போச்சு... விளைஞ்ச காடெல்லாம் தரிசா கெடக்கு... மாசூல் எடுக்க முடியல... வேலிக்கருவல் போட்டு வீட்டு ஒசரத்துக்கு நிக்கி... எல்லாத்தையும் வித்து வாயில போட்டாச்சு... எல்லாம் ஆண்டி ஆயிட்டான். ஆண்டிய அடிச்சா கந்தல் பறக்கும். நம்மல மாதிரி இல்லாத பயல், சப்தி வந்தாஅர்னாக் கயித்த அத்து நாண்டுக்கிருவான் சம்சாரி..." கொஞ்ச நேரம் சாமிநாயக்கர் வாய்க்குள் புலம்பினார். வார்த்தை நெஞ்சை அடைத்தது. மண்டைய முட்டி முட்டி சாகனும் போல படபடப்பு. கோர்ட் வாய் அடைத்துக்கிடந்தது. கிளார்க்குதலை குனிந்து கோர்ட்டாரிடம் காதைக் கொடுத்துக் கிசு கிசுத்தான். கிராம அதிகாரியின் பயிர் எடுப்பு ரிக்கார்டுபடி வருஷா வருஷம் மகசூல் வருதாமே உமக்கு. ரிக்கார்டு பேசுது... நீர் என்ன சொல்கிறீர்... அதை என்ன சொல்ல... எசமான் நேர்ல வந்து பாக்கணும் அதை. கழுத மேயிது... எரிக்களை மொளச்சிக் கிடக்கு. பெழச்சுப் பெழச்சு இந்த லெச்சத்தில இருக்கு... சாமிநாயக்கருக்கு குளிர் காச்சல் விட்டுப்போயி வாக்கு சாதுர்யம் கோர்ட்டையே அரட்டியது. சாமிநாயக்கர் வாக்கு அவரது கைக்குடை போன்றது. வெந்து அவிந்து போன காட்டையே கோர்ட்டுக்குள் குடையாக விரித்தார். சபையே கட்டுண்டது. கருப்புக் கவுன்களை எல்லாம் மடக்கிப் பிடித்தார் கைக்குடையாக, பிடித்த பிடியை விடாமல் குடையை கக்கத்தில் இடுக்கிய மாதிரி கூண்டுக்குள் சாமிநாயக்கர் நின்று கொண்டிருந்தார். வாக்கு அடித்தது. யார் முகத்திலும் ஈயாடலை, அசைவில்லை. கலிக்கோ பைண்ட் போட்ட புஸ்தகங்கள் கண்ணாடிப் பீரோவுக்குள்ளிருந்து சாமிநாயக்கரை எட்டிப்பார்த்தன. சுவர்கள் கதறின. கருப்புக் கவுன்கள் அசையவில்லை. வழக்கமான உணர்ச்சிகளற்ற 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/27&oldid=839007" இலிருந்து மீள்விக்கப்பட்டது