பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முகங்களில் மொந்தையான அசடு வழிந்து கொண்டிருந்தது. கோர்ட் ஜன்னல்களில் தலைகள் தொங்கின. விசாரணை முடிவான பைசலுக்கு வந்துவிட்டது. சாமிநாயக்கர் பீடத்தின் மேலிருந்த கருப்பு கோட்டை புதிராகப் பார்த்தார். வினோத பாவத்துடன் அழுத்தமான சிரிப்பை அடக்கியபடி கை விலங்கை உற்றுக் கவனித்தார். தாயோளி..... நம்மள களி திங்க வச்சிட்டானே... என்று நமட்டுச் சிரிப்புடன் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார் சாமிநாயக்கர். பாளையங் கோட்டையில் இருண்ட சிறைக்குள் சின்னச் சின்ன ஒட்டைகள் வழியாக சன்னஞ் சன்னமாக வியப்பூட்டும் ஒளி. வெளியில் மரங்களில் குருவிகள் சலம்புகிறது. கீறல் விழுந்த மரக்கதவின் இடுக்குகளில் நுழைந்து வருகிறது செல்லக் குருவி. ஜெயில் வராண்டாவில் கிரிமினல் குற்றவாளிகள் அணில் குஞ்சை கொஞ்சிக் கூத்தாடுகிறார்கள். நம்ம வேலுத்தேவன் இருக்கானா... என்று சற்றுப் பார்த்தார். வீச் வீச் சென்று அணில் குஞ்சி இந்தப் பக்கமாக ஓடிவந்து வாலை ஆட்டுகிறது. அனாதப்பயல் வேலு சின்னஞ் சிறு கால்களுடன் சாமித் தாத்தாவுக்கு பின்பக்கமாக பதுங்கிப் பதுங்கி வந்து கண்ணைப் பொத்துகிறான். கெக்கே கெக்கே என்று சாவன்னா அவனை முதுகில் தூக்கிச் சிரிக்கிறார். ஒட்டமாய் ஓடுகிறான். அவனைப் பிடிக்கக் கையை நீட்டினார். அடே வேலு. நெர அம்மனத்தோடு கம்மாக்கரைமேல் ஓடிக்கொண்டிருந்தான் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள் சக்கிலியப்புள்ளை ஈஸ்வரி. ஆட்டுக்குட்டீ. ஆட்டுக்குட்டீ... அம்மணக் குண்டித் தாத்தா. என்று கத்துகிறாள். சாமித்தாத்தா, அவன் இடுப்பில் கட்டி விட்ட ஆட்டு மணி, அருணாக்கயித்தில் கிடக்கும். ஆட்டுமணி ஓயாமல் கத்துகிறது. கிணு கிணு வென்று கரையெல்லாம் சத்தம் சிதறிக் கொண்டே ஓடினான். 27