பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாத்துக்காட்டில் நாயக்கமார் வீட்டு மாடுகளோடு நின்றிருந்தாள் ஈஸ்வரி. வேலுப்பயல் ஆடு மேய்க்க தாத்தாக் குதிரையில் வந்து கொண்டிருந்தான். - தெருவில் உள்ளவரெல்லாம் வாங்கய்யா. மகராசா, கொம்பனான குதிரை போல இக்கே. என்று கேலிப் புன்னகையுடன் போனார்கள். - வேலுப்பயல் சாமித்தாத்தா தோள் பட்டையில் உட்கார்ந்து தாத்தா தலை மயிரை இறுக்கிப் பிடித்து டக்கட்டீ. டக்கட்டி என்று சத்தம் கொடுத்தான். தாத்தாக்குதிரை மெல்லத்தான் ஒடும் ஆடுகளுக்குப் பின்னால், காட்டில் மகாராணி ஈஸ்வரியம்மா காத்துக் கிடந்தாள், காட்டை இருட்டிக்கொண்டு. . அவளைப்பார்த்ததும் தாத்தாக் குதிரையில் இருந்தபடி அலட்சிய மாய் பார்த்தான். அவளுக்குப் பொறாமை தாங்கவில்லை. ஆட்டுக்குட்டீ. ஆட்டுக் கிடாயி... அமணக்குண்டீ... ம்மே.ப்பே. - என்று ஆடு மாதிரி கத்தி வக்கணை காட்டிவிட்டு நாத்துக்குள் ஒடி விட்டாள். அவன் தாத்தாக் குதிரையிலிருந்து குதித்தான். ஆட்டுக்கு கோபம். ஆட்டுக்கிடா மாதிரி விரல்களை தலைக்கு மேல் கொம்பு வைத்துக் கொண்டு முட்ட ஓடினான். அவள் தப்பி ஓடினாள். கிடா விரட்டியது. நாத்துக்குள் பாய்ந்து அவளை நெருங்கி விட்டது. சதக், சதக்சதக்கென்று முட்டியது கிடா, கிடா முட்டிறிச்சி. கிடா முட்டிறிச்சி... ஹைய்ய்ய்ய் என்று தாத்தாக் குதிரை கனைத்தது. அவளுக்குத் தோல்வி தாங்கவில்லை. வாய்விட்டு அழுது விட்டாள். - - ஈஸ்வரியிடம் வெற்றிவாகை சூடிய கிடா மணிச்சத்தம் கேட்க நாத்துக் குள்ளிருந்து ஓடிவரும். தாத்தாவை முட்டவரும். சாமி தாத்தா பயந்த மாதிரி பாசாங்கு செய்தார். தாத்தாவை முட்டிவிட்டது. அய்யோ.... ஆடு முட்டிறிச்சே. முட்டிறிச்சே... என்று கீழே விழுந்து பாவலா செய்தார் தாத்தா, 38