பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாமி நாயக்கரைப் பார்த்ததும் தெருவிளக்குகள் ஏககாலத்தில் அணைந்து கண்ணை மூடிக்கொண்டன. கிஹ கிஹ கிஹி... என்று ஆக்கங் கெட்ட கூகையாட்டம் சிரித்தார். சிரிப்பில் அனல் அடித்தது. சுவர்கள் எதிரொலித்தன. சிரிப்பு இருமியது, பழைய பெட்போர்டு மோட்டாரைப் போல் பெரிய ஹீங்காரத்துடன் உருமி சளியைத் துப்பினார். தெரு உறங்கியது அழுப்புடன், முதல் கதவு திறந்தது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரென்று நெளித்து நீட்டி கொட்டாவிவிட்டு சொடுக்கியது. பிளாஸ்டிக் வாளியும் கையில் விளக்கமாறுமாக இருட்டு மூஞ்சி நின்றது வாசலில். சாமிநாயக்கனுக்கு விடிஞ்சிரிச்சி டோய்... என்ற எகத்தாளத் துடன் கைத்தடி துள்ளியது. கைத்தடித் தோழன் சாமிநாயக்கரை வரவேற்று அழைத்துக்கொண்டு போனான், திறந்த வீட்டு வாசலுக்கு. வாசல் தொளிக்க முந்தி கெழட்டு எளவு நிக்கிதே. மூதேவி மூஞ்சியில விடியணுமா... பச்சை பிளாஸ்டிக் வாளி சிடு சிடுப்புடன் திட்டியது மனசுக்குள். எம்மா... என்னம்மா... என்னத்த கேக்கப் போரன். கிழவனுக்கு கீழ கொட்டுரத போடுங்கம்மா... இல்லேங்காம போடுங்கம்மா... நைசாக சிடு மூஞ்சிக்கு நேராக ஈயத்துக்கு வாளியை ஏந்தினார் சாமிநாயக்கர் விடிஞ்ச மூஞ்சி மாதிரி தெரியலை. முகம் சுண்டிச் சுருங்கி இருட்டியது. - ஏம்மா...அப்பிடி பாக்குரே.... சமுசாரிதான்மா... சாமிநாயக்கன் சமுதாரிதான்மா... - பெழச்சு பெழச்சு இந்த லெட்சனத்தில இருக்கு. அங்குட்டு போயிட்டுவா... வாசல் தெளிக்க விடமாட்டியோ போ போ... சரி சரிம்மா சரிம்மா சரிசரி.... முனங்களுடன் கைத்தடி நகர்ந்தது. வாசலிலும் ஏகமாய் தண்ணி சலம்பியது வசவுகளுடன். எல்லா வாசலிலும் ஏகமாய் தண்ணி கொட்டப்படுவதும் திட்டுவதும் சாமி நாயக்கரை நெடுக விரட்டியது, தண்டவாளங்களை நோக்கி. 31