பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அடேயப்பா... சாவன்னா எப்பேர்ப்பட்ட மனுசன்... சாமான்ய ஆளா.... சாமிநாயக்கர் போயி சேந்துட்டாரே.... தடுமாறி விழுந்திருப்பாரோ.... சமுசாரிய்யா நான் சமுசாரிய்யான்னு என்னமா சொல்லிச்சொல்வி பிச்சை எடுத்தாரே.... மனசு இடிஞ்சு போயி ரயில்ல விழுந்திட் டாரே... இல்ல.... இல்ல.... சாமிநாயக்கர் பேரனுக்கு கிறுக்கு புடிச்சு ரோட்டுல அலையிரானாம். அதப்பாத்து மனசு பொறுக்காம ரயில்ல விழுந்திட்டாரு... என்ன பெரிய மனசு... பாருங்க.... சாமிநாயக்கரின் சுய புராண ஒப்பித்தலை ஆளுக்கு ஆள் விடாமல் பொழிந்தார்கள். ஆனால் குருமலை சொசைட்டி கிளார்க்கு ஆனந்த கிருஷ்ணன் கட்டன்கரெக்டா சாமிநாயக்கரின் வில்லங்கத்தை அவுத்து வைத்தான். அதைச் சொல்லும்போது மர்மத்துடன் கண்களை உருட்டினான். சாவன்னாவுக்கு ஏகப்பட்ட கடன் பாக்கி. ஜெயில்ல களி தின்னுக் கிட்டு கெடந்தாரு... அங்கயும் கடன்காரன் விடல... இப்ப சட்டி எடுத்து அளஞ்சாலும் கடன்காரன் விடுவானா. கொண்டுபோயி தண்டவாளத்துல தள்ளிட்டானே... எல்லாரும் கடனைக் கட்டாம வாழவே முடியாது என்று தீர்வு சொன்னான். கூட்டம் மைனாக்குஞ்சுமாதிரி வாயை வாயைத் திறந்து உளறியது. தெரு முழுவதும் துக்கம் கசிந்து வழிந்தது. வெயில் துக்கத்துடன் சாய்ந்து கிடந்தது. வெள்ளைத் துணி போர்த்திய பிரேதம்... அருகில் கைத்தடி... டிக்கடை பெஞ்சியில் போலீஸ்காரர்கள் தூங்கி வழிந்தார்கள். பிரேதம் போர்த்தி இருந்ததுணியில் எங்கும் திட்டுத் திட்டாய் ரத்தம். தண்ட வாளங்களைக்கடந்து போகிறவர்களுக்கு இத்தனையும் பயத்தை உண்டாக்கியது. தெட்சிணாமூர்த்தி தெருப்பாதை இருட்டியது. பாதை மறித்தது. ராத்திரி எல்லாம் சாவு வாடை. மேகாத்து பயந்து உளறியது, தெட்சிணாமூர்த்தி தெருவில் சாமிநாயக்கரின் கைத்தடி சத்தம் எழுப்பியது. கவாத்து கவாத்தென்று. சாமிநாயக்கர் பாதங்கள் தரையில் உரசும் சத்தம். நாய்கள் பயந்து ஊளையிடவில்லை. இரவின் உருவம் சாமிநாயக்கரின் முகத்தைப்போல் செத்துக் கிடந்தது. 33