பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. வேதாளம் சொன்ன கதைகள் தி.சு. இளஞ்செழியன் (மரத்தடியில் ஒரு இளைஞன்அமர்ந்து கொண்டிருக்கிறான். பயங்கரமான சிரிப்பொலியைத் தொடர்ந்து வேதாளம் ஒன்று மரத்திற்குப் பின்புறமிருந்து வெளிப்படுகிறது. இளைஞன் திரும்பிப்பார்த்துவிட்டு அலட்சிய பாவத்துடன் மீண்டும் எழுதத் தொடங்குகிறான்.) - வேதாளம்:- ஏ! மானிடப்பதரே! உனக்கு அவ்வளவு அலட்சியமா? நான் யார் தெரியுமா? இளைஞன்:- சே கொஞ்சநேரம் நிம்மதியா இருக்கலாமின்னா அதையும் கெடுக்க யாராவது வந்துடறாக இப்ப ஒனக்கு என்ன வேணும் (பையைத் துழாவிவிட்டு இரண்டு பத்துப் பைசா நாணயங்களை எடுத்து வீசுகிறான்) இந்தா இத எடுத்துக்கிட்டு எடத்தைக் காலிபண்ணு! t வேதாளம்:- (காசை எடுத்துப் பார்த்து விட்டு) இது என்ன? எதற்காக இதை என்னிடம் கொடுக்கிறாய்?. இளைஞன்:- எங்கிட்ட இதெவிட்டா வேறே காசு கெடை யாது! திருவிழா வந்துடிச்சின்னா இவுங்கபாடு கொண்டாட்டம் தான்! ஏதாவது ஒரு வேஷம் கட்டிக்கிட்டு இருக்கறவுங்க உயிரை எடுக்கறாங்க காசு குடுத்தாலும் வேணாங்கறே வேறே என்னதான் வேணும்? வேதாளம்:- (பெரிதாகச் சிரிக்கிறது) பிள்ளாய்! என்னை வேஷக்காரன் என்றா எண்ணிக்கொண்டிருக்கிறாய்? நான் யார் தெரியுமா? நான் விக்ரமாதித்தன் காலத்து வேதாளம்: இளைஞன்:- அடச்சீ புளுகறதுக்கும் ஒரு அளவேயில்லா மல்ல போயிடிச்சி! நீ விக்ரமாதித்தன் காலத்து வேதாளம்னா அத நம்ப நான் என்ன முட்டாளா? வேதாளம்னா ஒரு முருங்கமரம் இருக்கும், அதுமேல ஒரு பிணம் தொங்கும், அதை எடுத்துக்கிட்டு