பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இளைஞன்:- போனாப் போகுதுன்னாமேலே மேல போறியே என் கண்டிஷனை ஒத்துக்க முடியாதுன்னா ஒன்பாட்டைப் பார்த்துக் கிட்டு நீபோ என் பாட்டைப் பாத்துக்கிட்டு நான் போறேன். ஆமாம். கேவலம் ஒரு மனுசன் என்ன கண்டிஷன் போட்டுடப் போறேன்? ஒத்துக்கயேன்? - வேதாளம்:- ம்... இந்தக் கேவலமான மனுசங்ககிட்டே யெல்லாம் கண்டிஷன் வாங்கணும்னு என் தலையெழுத்து. சரி சொல்லு... - இளைஞன்:- எனக்கு எவ்வளவோ பிரச்சனைங்க! அந்தக் கவலையிலே நிம்மதியை நாடி இங்கே வந்தேன். அதையும் கெடுக்க நீ வந்துட்டே சரி ஒன் கதைக்கி நான் சரியான பதிலைச் சொல்லிப் புட்டா. என் பிரச்சனைகள் மூணைச் சொல்லுவேன். அதைத் தீத்து வைக்கணும்... என்ன சொல்றே....? வேதாளம்:- பூ. இவ்வளவுதானா? நா என்னவோன்னு நெனச்சேன்.... இளைஞன்:- இப்ப இவ்வளவுதானாங்கறே அப்பறம் பின்வாங்கக் கூடாது. கண்டிப்பாகச் சொல்லிட்டேன்! வேதாளம்:- ஏன் ஒங்களுக்கெல்லாம் நம்பிக்கைங்கறதே இல்லாம போயிடிச்சி! இளைஞன்:- இப்பல்லாம் யாரை நம்பறதுன்னே தெரியல்லே நம்பிக்கைத் துரோகம் ரொம்ப சல்லிசாப் போயிடிச்சி!... எங்க அரசியல்வாதிங்க மாதிரி வாக்குறுதிங்களை அள்ளி வீசிப்பிட்டு எலக்ஷன் முடிஞ்சதுக்கப்பறம் எங்களையெல்லாம் திரும்பியே பாக்காதமாதிரி... அம்போன்னு தெருவில விட்டுட்டுப் போயிடக் கூடாது! . வேதாளம்: ஒகோ. அப்பிடியெல்லாம் கூட நடக்குதா? எனக்கெதுக்கு அதெல்லாம்? நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட வேதாளம். வார்த்தையின்னா வார்த்தைதான்... என் வார்த்தைதான் எனக்கு உயிர் . . இளைஞன்:- சரி விதி யாரை வுட்டுது. ஒன் கதையைச் சொல்லு. . வேதாளம்:- கதையை நல்லாக் கேட்டுக்க... சரியான பதிலைச் சொல்லல்லேன்னா ஒன்தலை வெடிச்சுப் போயிடும். 28