பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வேதாளம் சிரித்துக்கொண்டே மரத்திற்குப் பின்னால் போகிறது. வேதாளத்தின் குரல் மட்டும் ஒலிக்கிறது.) வேதாளம்:- பாரத தேசத்துல, தமிழ் நாட்டிலே, இராமநாதபுரம், இராமநாதபுரம்னு ஒரு ஊரு. தண்ணியின்னா என்னணு தெரியாத அந்த ஊருலேருந்து, எங்கேயோ பேர் தெரியாத ஒரு சின்ன கிராமத்துலேருந்து, பூமி வெளையாம போன நெலமையிலே வயித்துப் பொழைப்புக்காக, கடுங்குளிரையும் பொருட்படுத்தாம இந்த மலைப் பிரதேசத்துல பல வருஷங்களுக்கு முன்னால் குடியேறினவன் கருப்பண்ணன். வயித்தைச் சுருட்டிப் பிடிக்கும் குளிரா பசியாங்கற போராட்டத்துல வெற்றியடஞ்சது வயித்துப்பசி. மஞ்சள் மலை எஸ்டேட்டிலே டீ இலை பறிக்கும் தினசரிக் கூலியா வேலைக்குச் சேந்தான் கருப்பண்ணன். அன்னிலே ருந்து இன்னிக்கி வரைக்கும் அவனோட வாழ்க்கைத் தரத்துலேயோ, வேலையிலேயோ எந்தவிதமான முன்னேற்றமும் இல்லே! ஆனா குடும்பம் மட்டும் அரசாங்கத்தோட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு அடங்காத குடும்பமாப் பெருகிச்சு... (இளைஞனின் மீது ஒளிமங்குகிறது. மேடையின்மறுபுறம் ஒளிபரவுகிறது. ஒரு குடிசைக்குள் கருப்பண்ணன் கிழிந்த கம்பளியைப் போர்த்திக்கொண்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறான். மழை இடி, மின்னலுடன் பெய்து கொண்டிருக்கிறது. அருகில் மூலைக்கு ஒன்றாக குழந்தைகள் துங்கி. கொண்டிருக்கின்றன. அசிக்கன் விளக்கைப் பெரிது செய்து விட்டு குழந்தைகளைச் சரியாகப்படுக்க வைக்கின்றான். விளக்கில் பீடியைப் பற்ற வைக்கிறான், முகத்தில் பசிக்களைப்பும் கவலையும் தென்படுகிறது.) ...கருப்பண்ணனின் வழியைப் பின்பற்றினவன் அவன்மருமகன் சின்னான். சென்ற வருடம் பிரசவத்தின்போதுதான்மனைவியையும் பறிகொடுத்திருந்தான் சின்னான். டீ. எஸ்டேட்டில் நல்ல மழைக்காலம். தொடர்ந்த, இடைவிடாத மழையின் காரணமாக, இலைபறிக்கும் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப் பட்டவர்கள் இலை பறிக்கும் தினசரிக் கூலிகள் மட்டுமே. அவர்களில் கருப்பண்ணனின் குடும்பமும் ஒன்று... ஒரு நாள்... (தூக்கத்திலிருந்து ஒருசிறுவன் எழுந்து கருப்பண்ணனிடம் வருகிறான்) சிறுவன்:- தாத்தா...! தாத்தா..1 தரத்தாவ் கருப்:- (திடுக்கிட்டு) என்னடா கண்ணா? சிறுவன்:- பசிக்குது தாத்தா....! சாப்பிட ஏதாவது குடேன்! 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/40&oldid=463945" இலிருந்து மீள்விக்கப்பட்டது