பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்:- பாத்திங்களா? இப்புடி மொட்டையாசொன்னா? ஒங்க ஒடம்புல வயிறு எது? ஒடம்பு எது? ஒடம்பு பூரா ஒரே வயிறாத்தானெ இருக்கு? வியாபாரி:- இங்க தாங்க! நேத்தக்கி இங்கவலிச்சுது, இப்ப இங்க வலிக்குது, சுத்திச் சுத்தி வலிக்குதுங்க! - டாக்டர்:- அது என்ன உள்ள ஒடிப்புடிச்சு வெளையாடுது போல இருக்கு ஆமா நான் குடுத்த மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்ட் டீங்களா? வியாபாரி:- சாப்புட்டேங்க! டாக்டர் பின்னே சரியாப்போயி இருக்கனுமே கன்னா பின்னான்னு கண்டத சாப்புட்டு இருப்பீங்க! வியாபாரி:- இல்லிங்க நேத்தக்கிக் கூட உபவாசம்ங்க! டாக்டர்:- ஊக்கும்... அதான கேட்டேன்!... அந்த கேர் ஆப்லே கெடச்சதை வளைச்சு மாட்டி இருப்பீங்க! என்ன தோசையிலே ஒரு இருபது, சாப்பாத்தியிலே ஒரு பத்து, பழம், பாலு ஒரு லிட்டர் இவ்வளவு தான் சாப்புட்டு இருப்பீங்க! வியாபாரி:- சேச்சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லிங்க! முழுப் பட்டினி? கிருத்திகை விரதம் வேறே! அப்பிடி எல்லாம் சாப்பிட முடியுங்களா? ஒரே ஒரு பழந்தாங்க சாப்புட்டேன். அதுக்கப்பறம் தாங்க ரொம்ப வலிக்குதுங்க! டாக்டர்:- என்னது? ஒரே பழந்தானா? இந்த ஒடம்புக்கு? பின்னே ஏன் வலிக்குது?ஆமா என்ன பழம் சாப்பிட்டீங்க? வியாபாரி:- கேரளாவுலேருந்து என் சகலை வந்திருந்தாரா! எனக்கு ரொம்பப் புடிக்குமேன்னு ஒரே ஒரு பழம் வாங்கிட்டு வந்தாரு பிரியமா வாங்கிட்டு வந்து இருக்காரே! அதுவும் விரதம் வேறே! பழந்தானே பரவாயில்லேன்னு ஒரே ஒரு பலாப்பழந்தாங்க சாப்புட்டேன். - டாக்டர்:- அதானே பார்த்தேன்! ஒரே ஒரு பலாப்பழம்..! செட்டியாரே! நமக்கெல்லாம் வைத்தியம் பார்க்க இங்க முடியாதுங்க... எங்கியாவது ஒரு வெடர்னரி டாக்டராத்தான் பாக்கணும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/46&oldid=463952" இலிருந்து மீள்விக்கப்பட்டது