பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(இளைஞன் வயிற்று வலியால் துடிக்கிறான். சிறிது நேரம் கழித்து வார்டுபாய் வருகிறான்) ༥་་་་་་ கருப்:- ஏம்பா தம்பி வந்து ரெண்டு மணிநேரம் ஆச்சி, எம் பேரன் வயித்து வலியால துடியாத் துடிக்கிறான். டாக்டருங்க யாருமே வந்து பாக்கல்லியே! எப்ப வந்து பாத்து மருந்து கொடுப்பாங்க? வார்டுபாய்:- ஏன்யா சாவுகிராக்கி ஒனக்கு ஒண்னுமே தெரியாதா? என் உயிரை ஏன்யாவாங்கறே? இங்கே இருக்கற டாக்ட ருங்க எல்லாம் சம்பளம் சாஸ்தி வேணும்னு ஸ்டிரைக் பன்னிக்கிட்டு இருக்காங்க இருக்கறது. ஒண்னு ரெண்டு டாக்டருங்கதான். அவுங்களும் எப்ப வருவாங்களோ தெரியாது! கருப்:- அப்போ என் பேரனோட கதி? - வார்டுபாய்:- அதோகதி ஒன்னோட பெரிய்ய ரோதனையா யில்ல போயிடிச்சி! இங்கேவா (கையைச் சுண்டிக் காட்டி) வெவரம் தெரியாம இருக்கியே இது இருக்கா?. இது இருந்தாத்தான் இங்க எல்லாமே நடக்கும். நீ எங்களைக் கவனிச்சா நாங்க ஒங்களைக் கவனிப்போம்! ம்... அதுக்கு வழியில்லியா... பின்னே என்ன செய்யறது?... இங்கே ஒரு சிஸ்டர் வரும். அது தான் இங்க எல்லாம். அதெக் கேளு அது எல்லாம் சொல்லும்....! (போகிறான்) (ஒரு அரசியல்வாதி, செயலாளருடன் வருகிறார். நர்ஸ் எதிரில் வருகிறாள்) - அரசியல்வாதி:-தங்கச்சி! தங்கச்சி மருத்துவர் இருக்கிறாரா? நர்ஸ்:-(அதிர்ச்சியுடன்) என்னது? தங்கச்சியா? . செயலாளர்:-யக்கா தப்பாநெனச்சுக்காதீங்க சிஸ்டருங் கறதைத்தான் எங்க அண்ணன் பாசத்தோட தங்கச்சிங்கறாரு! நர்ஸ்:-(தலையில் அடித்துக்கொண்டு) அக்காவும் வேணாம்! தங்கச்சியும் வேணாம் ஒழுங்கா சிஸ்டருன்னே கூப்புடுங்க போதும் டாக்டரைத்தானே பாக்கனும்? வெளியிலே போயிருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு போயி அவர் ரூம்லே ஒக்காருங்க (போகிறார்கள்) -