பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்டு பாய்:-என்ன சிஸ்டர் காலையிலேயே வந்துட்டா னுங்க போல இருக்கு? என்ன வேணுமாம்? இன்னிக்கி நம்ப வேலை உருப்பட்ட மாதிரிதான்....!

நர்ஸ்:-டாக்டரைப் பாக்கணுமாம்! வேறே வேலை இல்லே! கூட ஒருத்தன் போறானே! நல்லா ஏத்த எறக்கமாப் பேசுவான். அங்க வேலை வாங்கித் தரேன், இங்கே அட்மிஷன் வாங்கித் தரேன்னு கண்ட எடத்துல காசு வாங்கி, சாப்பிட்டுடுவான். கடைசியிலே ஒண்ணும் செய்யறது இல்லே கையால ஆகாதவன் கிட்டிமுட்டி வெவரம் தெரிஞ்சு பணத்தை ஒதைச்சுக் கேட்டாஅய்யா நான் பொது வாழ்விலே இருக்கறவன்... நான் பணம் வாங்கவே இல்லேன்னு ஒரேயடியா சாதிச்சுப் புடுவான். அதோ போட்டுக்கிட்டுப் போறானே புதுசாவேட்டி சட்டை அதுகூட யாரை ஏமாத்தி வாங்கினதோ தெரியல்லே அவனையும் நம்பி புதுசு புதுசா யாராவது ஏமாந்துக்கிட்டுதான் இருக்காங்க!

வார்டுபாய்:அதெவுடும்மா ஏமாறறதுக்கு ஆளுங்க இருக்கற வரைக்கும் ஏமாத்தறவுங்க பாடு சல்லிசுதானே?

நர்ஸ்:- ஆமாய்யா கதையைக் கேட்டுப்புட்டு சிரிச்சுக் கிட்டு நில்லு... போய்யா போயி வேலையைப்பாரு....

- கருப்:- அம்மா காலையிலிருந்து எம்பேரன் வயித்து வலியினால துடிக்கிறான். டாக்டருங்க யாருமே வரல்லே! இங்கே வந்து நாலு மணிநேரம் ஆயிடிச்சி கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங் கம்மா! நர்ஸ்:- ஏன்யா நான் இங்க என்ன கதையா பேசிக்கிட்டு இருக்கேன்?நான் ஒருத்தி என்னய்யா செய்ய முடியும்? எல்லாம் எங்களுக்குத் தெரியும் நாங்க பாத்துக்கறோம்!

வார்டு பாய்:- சிஸ்டர் காலையிலேருந்து இந்த ஆளுகூட பெரிய்ய தொந்தரவு, என்னமோ இவனுக்காக மட்டுந்தான்னு இவனுக்கு நெனப்பு டாக்டருங்க யாரும் இல்லேன்னாலும் புரியல்லே! அட! கையில காசு ஏதாவது வெச்சிருக்கானான்னா அதுவும் இல்லே... ஒரு பீடிக்கிக் கூட வழியில்லேன்னா பாத்துக்கயேன்... சரியான சாவுகிராக்கி!

நர்ஸ்:- ஒம்பாடு ஒனக்கு ஏன்யா இப்பிடி துட்டு, துட்டுன்னு அலையறே?

49