பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வார்டுபாய்:- சர்தாம்போம்மா இல்லாங்காட்சி ஒன் ஒழுங்கு தெரியாது? இங்கே இருக்கற மருந்தை எல்லாம் வெளியிலே எடுத்துக்கிட்டுப்போய் விக்கறே எனக்கு இந்த மாதிரி ஏதாவது சாவுகிராக்கி கெடச்சாத்தானே உண்டு! கருப்:- அம்மா அய்யா நீங்க ரெண்டு பேரும் இப்பிடி அடிச்சுக்கற நேரத்துல என்பேரனைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா கொஞ்சம் பெரியமனசு பண்ணுங்கய்யா! நர்ஸ்:- சொன்னாக் கேக்க மாட்டே போய்யா நான் வரேன்! இளைஞன்:- தாத்தா அவுங்கக்கிட்டே ஏந்தாத்தா பேச்சு வாங்கறீங்க? பேசாம வீட்டோட இருந்திருந்தா இந்தப் பேச்சு வாங்கறதாவது மிஞ்சியிருக்குமே? (நர்ஸ்கையில் மருந்துடன் வருகிறாள்) நர்ஸ்:- என்னய்யா ஒன் கூட பெரிய ரோதனையாப் போச்சி! ஏன் இப்படிக் கத்தி கூச்சல் போடறே? இது ஆஸ்பத்திரி ஒங்கவூடு இல்லே! இந்தா இத சாப்பிட்டுப்புட்டு கம்னுகெட ஏய் கெளவா! நீ மூட்டையைக் கட்டு ஆசுபத்திரிக்கி கொண்டு வந்துட்டே இல்லே. எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆசுப்பத்திரிக்கி வந்தா அவுங்க அவுங்க டாக்டர் ஆயிடறாங்க! இது தர்ம ஆஸ்பத்திரியா இல்லே தர்மசத்திரமான்னு தெரியல்லே. குடும்பத்தோட இங்க வந்து டேரா அடிச்சுடறாங்க. ம்....ம்... மூட்டையைக் கட்டுங்க. விசிட்டிங் அவர்ஸ் நாலுலேருந்து ஆறு அதுக்குள்ள இங்க வரக்கூடாது! (காட்சி முடிவு) காட்சி 5 (ஆஸ்பத்திரி. வியாபாரியும் அரசு ஊழியரும் பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.) அரசு:- என்ன செட்டியாரே! ஒடம்புக்கு என்ன? ரொம்ப நேரமா டாக்டருக்காகக் காத்துக்கிட்டிருக்கீங்க போல இருக்கு?