பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<罗贞G... நீங்க சொல்றது ரொம்ப சரிங்க இனிமே நீங், இங்க வராதீங்க நீங்க கடசியாப்பாக்க வேண்டிய வைத்தியம் அங்கு தான்.... மாட்டு வைத்தியம்...! அரசியல்:- அதுபோகட்டும் செட்டியாரே! வியாபாரம் எல்லாம் எப்பிடி நடக்குது? வியாபாரி:- ஏதோ ஒங்க புண்ணியத்துல நல்லாவே நடக்குதுங்க எப்பிடியோ அய்யா கொஞ்சம் மனசு வெச்சு அந்த பர்மிட் விசயத்தையும் எனக்கே முடிச்சுக் குடுத்துட்டீங்கன்னா...! ஏதோ என்.ஆயிசு இருக்கறவரைக்கும் அய்யா பேரைச்சொல்லிகஞ்சி குடிச்சிக்கிட்டு இருப்பேன்! அரசியல்:- அதுக்கென்ன செஞ்சிட்டாப் போச்சு! (செயலாள. ரிடம்) இந்தாப்பா அடுத்த தடவை டெல்லிக்கிப் போறப்போ இதெ ஞாபகப்படுத்து செஞ்சிடலாம் எந்தக்கட்சி ஆண்டாநமக்கு என்ன? நம்பகையில நாப்பது எம்பிங்க இல்லே! அதுபோகட்டும் செட்டியாரே. சாயந்தரம் நம்ப வட்டச் செயலாளர் வருவாரு இந்த வருசம் செயற்குழுக்கூட்டம் நம்ப ஊர்லதான் போடறதா கட்சி மேலிடம் முடிவு பண்ணியிருக்கு. எலக்சன்வேற வருது பாருங்க அவுங்க வந்தா நல்லா கவனிச்சு அனுப்புங்க ஒங்களுக்கெல்லாம் சொல்லனுமா! - வியாபாரி:- என்ன அப்பிடிச் சொல்றீங்க ஒங்களுக்கு இல்லாததா? அரசியல்:- (அரசு ஊழியரிடம்) என்னப்பா எப்பிடி இருக்கே வேலையிலே சேர்ந்ததுக்கப்பறம் இந்தப் பக்கமே காணம்? என்ன விஷயம்? 卤好安名一 அப்பிடியெல்லாம் ஒண்னும் இல்லீங்க! புதுசா ஆபீஸர் ஒருத்தன் வந்துருக்கான்? சும்மாத் தொல்லை குடுக்கறாங்க அங்க இங்கே அசையவுடமாட்டேங்கறாங்க! ஒருநாள் லீவு போட்டா மெமோக் குடுத்துடறாங்க! என்னமோ இவன்தான் இந்த கவர்மெண்ட் ஆபீஸையே தாங்கறமாதிரி; இவன மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்போம்... அட நிம்மதியாத் துரங்க முடியல்லீங்க. வியாபாரி:- எங்க ஆபீசிலேயே? அரசு:- சட் சும்மா இருய்யா, நீ வேறே வேதனை! 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/53&oldid=463959" இலிருந்து மீள்விக்கப்பட்டது