பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசு:- பெர்னாட்ஷா என்ன சொன்னார் தெரியுமா Politics is the last refuge for fools & scoundrels gy. வியாபாரி:- ம்... இருக்கட்டும். இருக்கட்டும். என்னமோ இங்கிலீசுல சொல்லியிருக்கார். அது கெடக்கட்டும். இப்ப இவன் உள்ள போயிட்டான். இப்போதிக்கி வெளியில வரமாட்டான் எனக்கு வயித்தக் கலக்குது. நான் கொஞ்சம்.... போயிட்டு வரேன். よf牙gーごー அய்யய்யோ அவசியம் செய்யுங்க! கட்டாயம் போங்க (செட்டியார் போகிறார்) அரசு:- அய்யய்யோ! இந்த ஆஸ்பத்திரியிலே பாத்ரும்லே தண்ணியே வராதுன்னு செட்டியாருக்குத் தெரியாதே இனிமே செட்டியார் வந்தா... பத்து அடி தள்ளியே நிக்கணும். காட்சி 6 (வார்டு. இளைஞன் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருக்கிறான்) இளைஞன்:- தாத்தா... வயித்த ரொம்ப வ்லிக்குது தாத்தா உள்ளே என்னமோ ஒடைஞ்சமாதிரி இருக்கு தாத்தா என்னால் மூச்சு விடமுடியல்லே! என்னப் புடிச்சுக்க தாத்தா (அலறுகிறான்... கருப்பண்ணனும், சின்னானும் அமுக்கிப் பிடிக்க இளைஞனின் உயிர் பிரிகிறது.) கருப்:- சின்னா! என்னடாது? இவ்வளவு நேரம் மூச்சு விடாம சுத்திக்கிட்டிருந்தான்... இப்பப் பேசாம கெடக்கானே? எனக்கு பயமா இருக்குடா அந்த நர்சம்மாவையாவது கூட்டிக்கிட்டு வாடா! - - (சின்னான் நர்ஸை அழைத்துக்கொண்டு வருகிறான். நர்ஸ் இஞ்சக்ஷன் டிரேயுடன் வந்து ஊசிபோட முயற்சிக்கிறாள். உடல் சில்லிட்டிருப்பதைப் பார்த்துவிட்டு டாக்டரைக் கூப்பிட ஒடுகிறாள்.) காட்சி முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/55&oldid=463961" இலிருந்து மீள்விக்கப்பட்டது