பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி 7 (அரசியல்வாதி செயலாளருடன் டாக்டர் ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். டாக்டர்களைப்புடன் உள்ளே நுழைகிறார்) டாக்டர்:- சே என்ன வேலை?... பேசாம நானும் ஸ்டிரைக்கிலே சேந்து இருக்கலாம் (அரசியல்வாதியை நோக்கி வாங்க வாங்க! ஏது இவ்வளவு தூரம்? - அரசியல்:- கொஞ்ச நாளா ஒடம்பு சரியில்லிங்க தலை சுத்துது. எதைப் பாத்தாலும் ரெண்டு ரெண்டாத் தெரியுது. டாக்டர்:- அப்பிடியா? மொதல்லே பாத்துட வேண்டியது தான். (பரிசோதனை செய்துவிட்டு) ... ம்...அப்புறம் ஒடம்புக்கு ஒண்ணும் இல்லீங்க! நல்லாதான் இருக்கீங்க, நீங்க அனாவசியமா அலையக்கூடாது! மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியதுதான். அதுக்குன்னு ஒடம்பைக் கெடுத்துக்கக் கூடாது. அரசியல்:- என்ன மருத்துவரே! இந்த உடலா முக்கியம்? மக்களுக்குத் தொண்டு செய்ய இல்லாத உடம்பு எதுக்குன்னு அன்னிக்கே எங்க தலைவர் சொன்னார். டாக்டர்:- எந்தத் தலைவர்? போன மாசத் தலைவரா, இல்லே இந்த மாசப் புதுத்தலைவரா? நீங்க தப்பா நெனச்சுக்கப் படாது. விவரம் தெரியாமதான் கேக்கறேன். நான் பாட்டுக்கு ஒங்க பழைய தலைவரைப் பத்திப் பேசிப்புட்டு ஒங்ககிட்ட மாட்டிக்கக் கூடாது. பாருங்க அதுதான். அரசியல்:- ஓ! அந்த அருமை நாயகத்தைச் சொல்றீங்களா? அவனெல்லாம் ஒரு தலைவனா? எங்க தலைவர் ஆடிய பாதத்தோட பாதத்துசிக்கிச் சமம் ஆவானா? டாக்டர்:- ஓ! இப்ப ஆடிய பாதமா? இருக்கட்டும். இருக்கட்டும்... அரசியல்:- அருமை நாயகத்துக்கு மக்கள கவனிக்க எங்கங்க நேரம் இருக்கு ஒங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? அவனோட அந்தரங்க விசயங்களப்பத்தி நெறய விசயம் கெடச்சிருக்கு அடுத்த வாரம் நடக்கப்போற கூட்டத்துல இதை வெட்ட வெளிச்சமாக்கி 55