பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒங்களுக்கே தலை சுத்துதுன்னா கவனிக்க வேண்டிய விஷயம் தான்... பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ளே கட்சி மாறிடறான்னாப் பாத்துக்கங்களேன்.... நான் ஒங்களைச் சொல்லல்லே... பொதுவாச் சொல்றேன். (நர்ஸ் அவசரமாக வருகிறாள். அவள் குரலிலும், முகத்திலும் பதற்றம் தெரிகிறது.) நர்ஸ்:- டாக்டர் அந்தப் பதிமூணாம் நம்பர் பேஷண்ட்... டாக்டர்:- பிளிஸ் வெயிட்! நான் பேஷண்டைக் கவனிக் கட்டுமா இல்லே நீங்க சொல்றதைக் கேக்கட்டுமா? (அரசியல் வாதியிடம்) பி.பி. எல்லாம் நார்மலாத்தாங்க இருக்கு. செயலாளர்:- அதான் ஒண்ணுமில்லேன்னு டாக்டர் சொல்லிப் புட்டாரே! வாங்க தலைவரே போகலாம்! டாக்டர்:- வந்தது லேருந்து ஒங்களக் கேக்கணுமின்னு நெனைக்கறேன் ஆமா. இது யாருங்க புதுசா? அரசியல்:- இவரத் தெரியாதுங்களா? இது நம்ப பதினெட் டாம் வட்ட செயலாளருங்க! எனக்கு வலதுகை மாதிரி அதோட... ஹி..ஹி.... எனக்கும் செயலாளர் மாதிரி. டாக்டர்:- அப்போ அந்த ஒம்பது இப்ப இல்லீங்களா? நல்லாவே வளத்து விட்டிருக்கீங்க! அரசியல்:- இன்னும் வளர வேண்டியவருங்க இப்பதான் அரசியல் அரிச்சுவடியே படிச்சுக்கிட்டு இருக்காரு ரொம்ப நல்லவருங்க! - - டாக்டர்:- இருக்கட்டும்... இருக்கட்டும்... செயலாளர்:- அப்படியே நம்ம தலைவருக்கு ஒரு டானிக் ஆஸ்பத்திரியிலேருந்து குடுத்தீங்கன்னா... அரசியல்:- நீங்க ஒண்ணும் தப்பா நெனச்சுக்காதீங்க... என் மேல் அவருக்கு எவ்வளவு பாசம் பாத்தீங்களா? அதான் சொல்றாரு டாக்டர்:- அதுனால என்னங்க... பரவாயில்லே! ஒரு டானிக் எழுதிக் குடுக்கறேன்... அதைத் தண்ணியிலே கலந்து... சேச்சே! அது இல்லேப்போ இது வெறும் குடிக்கற பச்சைத் தண்ணியில கலந்து... ஏங்க அதுவேற உண்டா? 57