பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை ஒரே ஒரு வருடம் பத்து இதழ்களை வெளியிட்டுவிட்டு அன்னம் ஒய்வெடுத்துக் கொண்டுவிட்டது. பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, தேர்ந்தெடுத்து வைத்திருந்த சில படைப்புகளைத் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. அவற்றை நூலாகக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே "சுயம்வரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. ஒவ்வொரு இலக்கிய வகைக்கும் உதாரணமாக - இலக்கணமாக அமையும் படைப்புகள் சுயம்வரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழில் தொகுப்பு நூல்கள் அபூர்வம், ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு நகுலனின் முயற்சியால் வெளிவந்த ஒரு சிறந்த தொகுப்பு 'குருக்ஷேத்திரம். இப்போது வெளிவரும் இத் தொகுப்பு, எண்பதுகளின் தமிழ் இலக்கியப் போக்கை ஒரளவு அடையாளம் காட்டும் என்று நம்பலாம். 女 இத்தொகுப்பில் உள்ள ஒரே குறுநாவல் கோணங்கியின் 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள். ' கி.ராஜநாராயணனின் 'கிடை போல் இதுவும் என்றென்றும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்த குறுநாவல். இதுவும் கரிசல் காட்டுக் கதைதான். குறுநாவல் என்றாலும் இதிலும் இரண்டு பாகங்கள். முதல்பாகம் கரிசல் பூமியை மண் வாசனையுடன் படைத்துக் காட்டுகிறது. 'நெஞ்சுத் தடத்தை ஊணி தம்பிடிச்சு உழுங்கடா... அதாண்டா உழவு' என்று உழவுக்கு இலக்கணம் கண்ட சமுசாரி சாவன்னா என்ற சாமி நாயக்கர் ஒத்த மாட்டுக்கு சோடி தேடி பேரன் வேலுவுடன் ஊர் ஊராய்ப் போவது அந்தக்காலத்து மன்னாதிமன்னர்களின் 'அசுவமேத பாணியை நினைவுபடுத்துகிறது.