பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையிலேயும், வியாதியிலேயும் சாகறதை விட ஒரேயடியா வெசத்தைத்தின்னு செத்துடலாமின்னு அந்த மனுசன் மூட்டைப் பூச்சி மருந்தைச் சாப்பிட்டு இந்த ஆஸ்பத்திரியிலே தான் உயிரைவுட் டான். அது வேற யாரும் இல்லே! என் மாமன். பொறுப்பையும் லஞ்சத்தையும் பத்திப் பெரிசாப் பேச வந்துட்டே! அரசு:- அதுக்கு நாங்க என்னய்யாபண்ண முடியும்? நான் எல்லாத்தையும் ஒழுங்காத்தான் செஞ்சேன் மேல் எடத்துலேருந்து உத்தரவு வரல்லே! எங்கியோ சில காகிதத்துல கையெழுத்து விட்டுப் போச்சுன்னு திரும்பி வந்துடிச்சி! வியாபாரி: ஆமா இப்பிடிச் சொல்லி தப்பிச்சுக்கப் பாருங்க! அவுங்க மனுச உயிரோட பழகறாங்க. அதனால அது செத்துப் போறது ஒடனே தெரியுது? ஆனா நீங்க காகிதத்துக் கூடப் பழகlங்க! ஒவ்வொரு காகிதத்துக்கும் பின்னால ஒரு உயிர் இருக்குன்னு யாராவது என்னிக்காவது நெனச்சுப் பாத்திருக்கிங்களா? காகிதத்தக் கட்டி வெச்சு, கட்டிவெச்சு எத்தனை பேரோட உயிரை எடுக்கறிங்க? என்னிக்கி இந்த சிவப்பு நாடாத்தனம் ஒழியுமோ அன்னிக்கித்தான் இந்த நாடு உருப்படும்! - <9s石一 ஆமா இவுஹ பெரிய்ய ஒழுங்கு? ஏன்யா வியாபாரத்துல நீ பண்ணாத அட்டகாசமா? எதுல எதைக் கலக்கனு மின்னு வெவஸ்தையே இல்லாம போயிடிச்சு! அரிசியிலே கல்லைக் கலக்கறிங்க ரவையிலே மண்ணைக் கலக்கறிங்க கேவலம் மண் எண்ணெய்யைக் கூட விட்டு வைக்கல்லே! அதுலேயும் கலப்படம். பட்ஜெட் வரதுக்குள்ள எது எது வெலை ஏறப் போகுதுன்னு நல்லா தெரிஞ்சுகிட்டு அதைப் பதுக்கி வெச்சுக்கிட்டு பின்னால கொள்ளை லாபம் அடிக்கறிங்க ஒரு D.A. குடுக்கறதுன்னு அறிவிக்கறதுக்கு முன்னால மார்கட்டுல கத்தரிக்காயிலே ருந்து கடலை எண்ணெய் வரைக்கும் விலை கிடுகிடுன்னு ஏறிப்போயிடுது. ஏன்யா? பஞ்சப் படினா என்னன்னு தெரியாத கூலி வேலைக்காரங்களையும், பாமரஜனங்களையும் பத்தி என்னிக் காவது நெனச்சுப் பாத்திருக்கீங்களா? அட சின்ன குழந்தைங்க! அதுங்க என்னய்யா பாவம் பண்ணிச்சுங்க? அதுங்களுக்குக் குடுக்கற பால் பவுடரைப் பதுக்கி வெச்சுக் கொள்ளை லாபம் அடிக்கலே! வியாபாரி:- அட சர்த்தான் போய்யா இங்கே யாருய்யா ஒழுங்கு? நாடு போறபோக்கைப் பாத்தா எதுத்தாப்புல இருக்கற வன்லே யாரு யோக்யன், யாரு அயோக்கியன்னு சொல்ல முடியாத 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/63&oldid=463969" இலிருந்து மீள்விக்கப்பட்டது