பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அளவுக்கு ஊழல் தலைவிரிச்சு ஆடுது அப்பப்ப இந்த அரசியல்வாதிங்க. செலவுக்குப் பணம் வேணுமே... அதுக்காக அந்த நிதி இந்த வசூல்னு ஆளுங்கட்சியிலேருந்து எதிர்க் கட்சி வரைக்கும் எங்களைக் கசக்கிப்பிழிஞ்சாநாங்க பணத்துக்கு எங்கய்யா போறது? பொதையலா வெச்சு இருக்கோம், இவனுங்க கேட்டதும் ஒடனே வெட்டி எடுத்துக்கிட்டு வந்து குடுக்க? நீ எப்பிடி வேணும்னாலும் காசு சம்பாதிச்சுக்க, ஆனா எங்களுக்குக் குடுக்க வேண்டிய மாமூலை மட்டும் குடுத்திடுன்னு எங்களுக்கு வழி காமிச்சுக் கொடுத்ததே இவுனுங்கதானே?... அது போகட்டும். ஓங்க லட்சணம் என்னய்யா வாழுது? அஞ்சு வருசத்துக்கு ஒருதடவை ஓங்க கிட்டே ஒட்டுக் கேக்க வாரானுங்களே அவனுங்க அடுத்த எலக்ஷன் வர்ற வரைக்கும் அதே கட்சியிலேயேதான் இருப்பானா, வேறே கட்சிக்குப் போவானா, இல்லே அவனே புதுசா ஒரு கட்சி ஆரம்பிப்பானான்னு நிச்சயமா யாரு ய்யா சொல்ல முடியும் 9 நாளைக்கி ஒரு பேச்சு, பொழுதுக்கு ஒரு நடிப்பு சட்டையை மாத்திக்கற மாதிரி கட்சியை மாத்திக்கிட்டு ஜனநாயகத்தோட புனிதத் தன்மையையே கற்பழிக்க றாங்களே! நீங்களும் அதெல்லாம் பாத்துக்கிட்டு, ஒடனே மறந்துட்டு அவுங்க பேசறதுக்கெல்லாம் கையைத் தட்டிக்கிட்டு வெக்க மில்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... (அரசியல்வாதி கூட்டத்தை விலக்கிக்கொண்டு இறந்து கிடக்கும் இளைஞனைப் பார்த்து கண்ணிர் வருவது போல முகத்தைத் துடைத்து கொண்டு) - . அரசியல்:- ஆருயிரே உன்னைக் கொன்று விட்டார்களா இரக்கமற்ற இந்தப் பாவிகள்? இந்த நாட்டின், வளமான, எதிர்காலப் பிரஜையினை இப்படித்தானா நடத்துவது? மக்களிடையே மனிதத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது என்பது வருந்தத்தக்க, வேதனைக்குரிய, வெட்கக்கேடான சூழ்நிலை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இன்றய அரசியலில், அவமானச் சின்னங்கள் உருவாகி விட்டன. இப்படிப்பட்ட ஒரு கேவலமான சூழ்நிலை உருவாகும் என்று அன்ற்ே எங்கள் தலைவர் சொன்னார். அதற்கு உங்கள்பதில் தான் என்ன?... ஏ. பாரதமே! என்று கண் நீ விழிக்கப் போகிறாய்? நாங்கள் தேர்தலிலே போட்டியிடுகிறோம் என்று சொன்னால் அதற்கு எங்களுக்குப் பதவிமீது மோகம் என்று நீங்கள் தவறாகக் கருதக் கூடாது உங்களைப்போல் ஏழை எளிய மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்திற்கு, சமுதாயத்தின் கீழ் மட்டத்து 63