பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களுக்கு உதவத்தான் நாங்கள் போட்டியிடுகிறோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பதவி என்பதை உங்களுக்கு உதவ நினைக்கும் எண்ணத்திற்குக் கருவியாக மட்டுமே நினைக்கிறோம் எந்த நேரத்திலும் இந்தப் பதவியைத் தூக்கி எறிய நாங்கள் தயார் இன்றய தினம் எங்கள் ஆட்சி மட்டும் ஆட்சி பீடத்திலே அமர்ந்திருந்தால் இன்று இந்த மருத்துவமனையிலே நடந்துவிட்ட கண்ணிர்க் காவியம். இதோ இந்த மருத்துவ மனையிலே நடந்து முடிந்த சோக வரலாறு; இதோ இந்த மருத்துவமனையிலே ஒலித்துக் கொண்டிருக்கிறதே ஒரு அழுகை ஓசை; இதோ இந்த மருத்துவமனையிலே நடைபெற்றிருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக நடந்து இருக்காது என்றுதான் ஆணையிட்டுக் கூறுவேன். எனவே மக்களே! இனியாவது ஒரு ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் அதற்கு எங்களை நம்புங்கள் நம்புங்கள்.... (வார்டுபாய் சோடாவுடன் போய்க் கொண்டிருந்தவன், பேச்சைக் கேட்டுவிட்டு நிறுத்தியதும் உடைத்துக்கொடுக்கிறான்) வார்டுபாய்:- ஆரம்பிச்சிட்டானில்லே இனி ஒயமாட்டானே! அடுத்த எலக்ஷன் வர்றவரைக்கும் ஒயமாட்டான். இப்பிடிப் பேசிப் பேசியே நாட்டைக் கெடுத்துப்புட்டானுங்க! எங்கியாவது எளவு விளுந்தா இவனுங்களுக்குக் கொண்டாட்டம்! அதைப் பேசிப் பேசியே அடுத்த எலக்ஷனிலேயும் ஜெயிச்சிடுவானுங்க! அதையும் நம்பி நாமளும்தான் ஏமாந்துக்கிட்டு இருக்கோம்! அவனுங்களைச் சொல்லி என்ன குத்தம்? நமக்கு புத்தியில்லே! ம்... எரியற ஆட்டுலே புடுங்கினது ஆதாயம்! (இவர்களுக்கு நடுவில் தலையில் கையை வைத்துக்கொண்டு கருப்பண்ணன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். வெளியில்போன சின்னான் வருகிறான்). சின்னான்:- மாமா! எங்கெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சு பாத்துட்டேன்! பொணம்னா ஒரு வண்டிக்காரனும் வரமாட்டேங் கறான். ஒரே ஒரு டாக்ஸிக்காரன் மட்டும் வரேன்னான். அவனும் இருநூறு ரூபாய் கேக்கறான்! அவ்வளவு பணத்துக்கு எங்கமாமா போறது? கருப்:- அவ்வளவு பணத்துக்கு எங்கபோறதா? இதை எடுத்துக்கிட்டு மட்டும் போயி என்ன செய்யறதாம்? அதோ தெரியுது 64'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/65&oldid=463971" இலிருந்து மீள்விக்கப்பட்டது