பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இப்ப ஒடப்பாக்கறே? ஒனக்கு நான் பதில் சொல்லியாச்சு எனக்கு நீ கொடுக்க வேண்டிய வரம், முடியாத போனா நான் குடுக்க வேண்டிய தண்டனை இதெல்லாம் இருக்கே! வேதாளம்:- ஒ: அதெல்லாம் வேற இருக்கா? வயசாயிப் போச்சு பாரு, அதான் மறந்து போச்சு சரி சொல்லு! இளைஞன்:- மூணுபிரச்னைகள் உனக்குக் குடுக்கப் போறேன். அதை நீ தீத்து வைக்கனும். ஒண்ணு! எனக்கு ஒரு மகன் இருக்கான். அவன் நல்லாப் படிச்சிருக்கான். எல்லாப் பாடத்துலேயும் 98 சதவிகிதம் மார்க் வாங்கியிருக்கான் அவனுக்கு மெடிக்கல் காலேஜ் அட்மிஷனுக்காக எங்கெங்கியோ அலைஞ்சேன் 65,000/- பணமோ, இல்லே மினிஸ்டர் சிபாரிசோ வேணுங்கறாங்க! எங்கிட்ட இரண்டுக்குமே வழியில்லே! இருந்தாலும் அதுக்கு நான் தயாரா இல்லை. ஏன்னா அது என் கொள்கைகளுக்கு எதிரானது! நீ எந்த விதமான சிபாரிசும், லஞ்சமும் குடுக்காம மெடிகல் காலேஜ் அட்மிஷன்வாங்கித்தரணும்! இரண்டாவது:- எனக்கு ஒரு சின்ன எடம் இருக்கு அதுல வீடுகட்டணும்னு ஆசை எந்த விதமான அதிகாரிகளுக்கும் ஒரு பைசா லஞ்சம் குடுக்காம தாலுகா ஆபீஸ்ல ரிஜிஸ்டர் பண்ணிக் குடுக்கனும். மூணாவது..... வேதாளம்:- போதும் போதும்.... நிறுத்து இதெல்லாம் நடக்கற காரியமா? முக்யமா லஞ்சத்தை எப்பிடி ஒழிக்கறது? இளைஞன். அதெல்லாம் எனக்குத் தெரியாது! நானா ஒன்கிட்ட கதை கேட்டேன். நீ கதை சொன்னே, நான் சரியான பதில் சொன்னேன். இப்போ என்னோட முறை நீ என்னோட பிரச்சனைகளைத் தீத்து வைக்கணும்! வேதாளம்:- வேறே எதுவேனும்னாலும்கேளு இது மட்டும் என்னால முடியாது! தயவு பண்ணி ஒன்னோட எண்ணத்தை மாத்திக்கயேன்! இளைஞன்:- அதெல்லாம் முடியாது. வார்த்தைனா வார்த்தை தான்! நீ என்ன சொன்னே ஒன்னோட கேள்விகளுக்குச்சரியான பதில் சொல்லலேன்னா என் தலை வெடிக்குமின்னு சொன்னே இல்லே! 67