பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இப்ப நான் சொல்றேன், என்னோட பிரச்னைகளை ஒன்னால தீக்க முடியல்லேன்னா ஒன் தலை வெடிக்கனும்! இது மாதிரி அசட்டுத்தனமா யார் கிட்டேயும் கேள்வி கேட்டு மாட்டிக்கத் கூடாது! வேதாளம்:- அய்யய்யோ தெரியாம மாட்டிக் கிட்டேனே, தயவு பண்ணி விட்டுரு. இனிமே ஒன் பக்கமே வரமாட்டேன்! இளைஞன்:- வீணாப்பேச்சை வளக்காதே! பத்துலேருந்து எண்ணப் போறேன். ஒன் முடிவச் சொல்லு இல்லே முடிவுக்குத் தயாரா இரு. எங்கே பத்து. - ஒம்பது.... எட்டு...ஏழு..... ஆறு.... அஞ்சு.... நாலு.... முனு. ரெண்டு. - கடைசியா சொல்லு.... என்பிரச்னைகள்ளே ரெண்டுல ஒண்ணைக் குறைச்சுக்கறேன். ஒண்னுமட்டுமாவது முடியுமா...? வேதாளம்:- கொஞ்சம் மெதுவாத்தான் எண்ணேன் என்னால முடிஞ்சதுன்னா ஏன் இப்பிடிக் கெஞ்சறேன்! இளைஞன்:- முடியாது இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் (தலை வெடித்து வேதாளம் இறக்கிறது) இருட்டு..... திரை 68