பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வீட்டோர சாக்கடைப் பக்கம் முனிலிப் பாலிட்டிக்காரன் வெள்ளை மாவு தூவுவது போல் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள் வழியாய் நிலா கொஞ்சம் வெளிச்சத்தைத் தூவியிருந்தது. அடித்துப் போட்டது போல்இரண்டு பிள்ளைகளுக்கப்பால் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். கழுத்தில் மஞ்சள் கயிறு தெரிகிறது. அவளிட மிருந்து கழுத்துச் செயினை வாங்கிப்போய் பேங்க்கில் வைத்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இன்னும் ஒரு தடவை கூட வட்டி கட்டவில்லை. வந்த மூன்று நோட்டீஸ்களும் அந்த அலமாரியில். இனி ஏல நோட்டீசும் வந்து விடும். நோட்டு வாங்க மூன்று ரூபாய் கேட்டு அழுதழுது வீங்கித் தூங்கிவிட்டாள் மூத்தவள். மத்தியானம் வைத்த ரஸம், மத்தியானம் பொங்கிய சோறு, நாள்பட்டுப் போன ஊறுகாய். ராத்திரி சாப்பிட உட்கார்ந்த போது நாக்கை எதிலாவது சுட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. நினைப்புகள் ஒரு சீராயில்லை. ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றுக்கு மனசு குதித்துப் போய் விடுகிறது. கையா, காலா திருகாணியா போதுமென்று நிறுத்த. இது மனசு, அதுவும் தூக்கம் வராத உடம்புக்குள் உட்கார்ந்த மனசு. பறப்பதும் பரிதாபப் படுவதும் விழுவதுமாய் அது அமர்க்களமாகிக் கொண்டிருந்தது. நெஞ்சில் நாலைந்து ஏர்கள் தொலியடித்துக் கொண்டிருந்தன. - ஒரு நாள் டாக்டரிடம் போய ராத்திரிகளில் தூக்கம் வரமாட்டேனென்கிறது என்றான். டாக்டர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே 'முந்தியெல்லாம் தூக்கம் வரலைனா அர்த்தமிருக்கு. இப்பத்தான் கல்யாணமாயிருச்சே, ஏன் தூக்கம் வரலை என்றார். மனுசனுக்குள்ள ஆயிரம் கவலைகளைப் பத்தி ஒரு டாக்டரும் படிக்கிறதில்லை. அவர் சொன்ன அந்த ஒரு சங்கதிக்காகத் தான் மனுசன் பேயாய் அலைவதாய் டாக்டர் படித்துத் தெரிந்து வந்திருக்கிறார். உண்மையிலேயே தெரியாமல்தான் டாக்டர் அப்படிப் பேசுகிறாரா அல்லது வேண்டுமென்றே பேசுகிறாரா தெரியவில்லை. . இவன் பல முறை பார்த்திருக்கிறான். சீக்காளி ஒரு ஏழை கிளார்க்காக இருப்பான். பேண்ட் சட்டை போட்டுக்கொண்டுபோய் வயிற்றுவலியென்று சொன்னால் போதும். டாக்டர் உயர்ந்த பேச்சில் 70