பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு நாள் சொப்பனம் தெரியாமல் தூங்கியிருக்கிறான் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதிவிட்டு மதுரையில் ராத்திரி பத்தரை மணிக்கு பாஸஞ்சர் ரயிலில் ஏறினான். கிராமத்திலிருந்து மதுரைப் பக்கமெல்லாம் போய் வருகிற ஆள் மணிமாமா. ரயிலில் திருட்டுப் பயல்கள் ஜாஸ்தியாய்ப் புழங்குகிறார்கள் என்று படித்துப் படித்துச் சொல்லி அனுப்பியிருந்தார். ஐந்து ரூபாயும் டிக்கெட்டும் சட்டைப் பையில் இடது கைமாறி வலதுகை, வலதுகை மாறி இடது கை என்று சட்டைப்பையைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டே தூங்காமல் விடிகாலை மூன்று மணிக்கு ராமநாதபுரம் வந்து இறங்கியாயிற்று. . - ராத்திரிக் கடைகளில் சினிமா வசன ரிக்கார்டுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கிராமத்திற்குப் போனால் இதெல்லாம் எங்கே கேட்க முடியப் போகிறதென்று ஒரு பெஞ்சில் உட்கார்ந்து விடிய விடிய வசனம் கேட்டு விட்டுக் காலையில் ஊருக்கு பஸ் ஏறினான். பஸ் படுவேகமாய்ப் போனது, சில்லென்று காலைக் காற்று வீசியது. மரங்கள் செடிகள் எல்லாம் ஒட்டம் எடுத்தன. எல்லாம் அழகாய் வேகமாயிருந்த அந்த விநாடியில் அவனுக்குவேலை கிடைத்து விடுமென்று திடீரென்று ஒரு நம்பிக்கை வந்தது. சுற்றுப்புறம் இன்னும் அழகாகவும் பஸ் இன்னும் வேகமாய்ப் போவதாகவும் நினைத்தான். மதுரை மாதிரி பெரிய பெரிய ஊர்களில் கை நிறையசம்பளம் வாங்கி வேலை செய்யப் போவதை மனசு துள்ளித் துள்ளி நினைத்தது. ஒவ்வொரு திட்டமாய்த் தீட்டித் தீட்டி முடிப்பதற்குள் ஊர் வந்து விட்டது. - குளித்துப் 'பளையது சாப்பிட்டுப்படுத்த ஆள்தான். அம்மா தலையைத் தொட்டது போலிருந்தது. எழுந்து பார்த்தால் சாயங்காலம் ஆகியிருந்தது. படுத்து ஒரு நிமிடத்தில் எழுந்தது போலிருந்தது. துளி சொப்பனம் வந்ததாய்த் தெரியவில்லை. அப்படித்துக்கம் இன்னும் தூங்கவில்லை. ஒரு நாள் ஆபீஸர் "ஏன் பங்கி அடிச்சுப் போயிருக்கீய!' என்றார். முதல் நாள் ராத்திரி இந்த ராத்திரி போல. தூக்கம் வராமல் கிடந்து காலையில் எழுந்து அப்படியே ஆபீஸ் போனதும் முகத்தில இருந்திருக்கும். "ராத்திரி பூராதுக்கம் வரலை" என்றான். ஆபீஸர் யோகாசனம் செய்யச் சொன்னார். 72