பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பத்தடிக்குப் பத்தடி அறையில் குடித்தனம். இதில் எங்கே போய் யோகாசனம் செய்வது? அஞ்சரை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கைப் பம்ப்பில் தண்ணீர் அடிக்க் வேண்டும். ரெண்டு சிறிசுகளையும் குளிக்க வைக்க வேண்டும். சைக்கிள் ஏற்றி எட்டு மணிக்கெல்லாம் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்தில் விட வேண்டும். வந்ததும் குளித்துசாப்பிட்டுக் கை காயுமுன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு ஒட வேண்டும். ரிஜிஸ்தர்களையும் ஃபைல்களையும் கட்டிக் கொண்டு அழ வேண்டும். எந்த இடைவெளியில் எந்த இடத்தில் போய் யோகாசனம் செய்ய? காலையில் வாக்கிங்' போகலாமென்று ஏத்ரீ கிருஷ்ணன் சொன்னார். கை பம்ப், குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, பள்ளிக் கூடத்திற்குக் கூட்டிப்போவது, கடன்காரனைக் கண்டு திகில் கொண்டு ஒடுவதெல்லாம் எப்போ தீர்வது; எப்போ வாக்கிங் போவது? போன மாதம் ஆபீஸ் வேலையாய் மெட்ராஸ் போக வேண்டி வந்தது. பாரீஸ் கார்னரிலிருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் இருக்கும் சிநேகிதன் வீட்டிற்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தான். விடிய வேண்டிய நேரம். கடற்கரைச் சாலையில் வயிறு பெருத்த ஆள்கள் சொத் சொத் தென்று நடந்து கொண்டிருந்தார்கள். வாலிபமான ஆள்கள் பல பேர் விறுக் விறுக்கென்று நடந்தார்கள். கடற்காற்று புசு புசு வென்று வீசிக் கொண்டிருந்தது. பசேலென்ற கடற்கரை ரொம்ப அழகாயிருந்தது. மந்திரி ஒருவர் போலீஸ் காவலுடன் காற்றை இழுத்து அனுபவித்து நடந்துகொண்டிருந்தார். அநேகமான பேர் வெள்ளை ட்ரவுசர் வெள்ளை அரைக்கை பனியன் வெள்ளை கான்வாஸ் ஷ-க்களோடு பறவைக் கூட்டம் போல் திரிந்தார்கள். அவர்கள் ஏறி வந்த கார்கள் சாலை எங்கும் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தன. கார்களை ஒட்டி வந்த டிரைவர்கள் யாரும் வாக்கிங் போகவில்லை. கார்களின் ஓரங்களில் நிழல் விழுந்த திசைகளில் துண்டை விரித்துப் போட்டுத் தூங்கிக் கொண்டிருந் தார்கள். காசிருந்து வசதியிருந்தால்தான் வாக்கிங் கீக்கிங் எல்லாம் சாத்தியம் என்று அன்றைக்குப் புரிந்தது. - கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண் டாகியிருந்தது. 73