பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வளவு பருமனாய்க் கோவை பழுப்பது எந்த ஊரிலும் இல்லை என்று கிஷ்ணக் கோனார் ஓயாமல் சொல்வார். கோவில் வாசலில் கதவு கிடையாது. கல் நிலை வழுவழு வென்றிருக்கும். அதில் உட்கார்ந்தால் எட்டுத் திசையிலிருந்து வீசும் காற்றும் அந்த நிலை வழியாய்ப் போவது போலிருக்கும். எல்லாப் பயிர் வாடையும் அதிலிருக்கும். காட்டுச் செடிகள் விசேசமான வாசங்கொண்டு காற்றில் வரும். தூங்கி எழுந்து வந்தவனுக்குக்கூட அந்த சொகத்தில் மறுபடி கண்ணைச் சொக்கும். பரம்பரை பரம்பரையாக அந்தக் காற்றையும் மண்ணையும் விட்டுச் சீமானாகப் போவதாய் நினைத்துக் கொண்டு வேலை கிடைத்ததும் டவுனுக்கு வந்து மேலும் மேலும் சீரழிந்ததுதான் கண்டபலன். சுத்திச்சாக்கடையும் நடுவில் பத்தடிக்குப் பத்தடி வீடும் பத்தாத சம்பளமும் கைகட்டி நிற்க வேண்டிய உத்தியோகமும் கடனும் கப்பியுமாய்.... சே.... என்று வருகிறது. ஒரு நியமம் குறையக் கூடாது. எழுந்திருப்பதிலிருந்து படுப்பது வரை எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். நேரப்படி எழுந்திருக்காவிட்டால் முதலாளியின் சம்பாத்திய ஒழுங்கு கெட்டுப்போகும். பணக்காரர்கள் அதிகாரிகள் அவர்கள் செளகர்யத்திற்கு - சம்பாத்ய முறைக்கு வைத்துக் கொண்ட பழக்க வழக்கங்கள், கிளார்க், அட்டெண்டர்களுக்கும் வந்து கொன்று தின்கிறது. ஆகாசத்திற்கு ஆசை உண்டாகிப் பாதாளத்தில் வாழ்க்கையை வைத்து விட்டார்கள். - பயிர் பச்சையைப் பார்த்து வெகு நாளாகிறது. வீட்டிலிருந்து இருபது தெருத் தாண்டிப் போனால்தான் மெயின் ரோடுவரும். கடை, ஆபீஸ், மார்க்கெட், சிநேகிதர்கள் எல்லாம் இந்தத் தெருக்களுக்குள் அடங்கி விடுகிறது. எங்கே போய் காற்று வாங்குவது? என்னவென்று சொல்லி மெயின் ரோடு போய்ப் பயிர் பச்சைகளைப் பார்ப்பது? - கடிகாரத்தைப் பார்த்தான். மணி நாலரை ஆகியிருந்தது. உடம்பு மந்தென்றிருந்தது. மெல்ல எழுந்து அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான். அவளும் பிள்ளைகளும் நல்லதுாக்கத்திலிருந்தார்கள். ஒரு யோசனை யுமில்லாமல் கதவைத் திறந்தான். மெல்லச் சாத்தி வைத்துவிட்டு 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/76&oldid=463982" இலிருந்து மீள்விக்கப்பட்டது