பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைக்குப் போனான். அந்த ஸ்டோரில் தங்கியிருக்கும் எல்லோருடைய சைக்கிள்களிலும் தன் சைக்கிளைத் தேடிக் கண்டு பிடித்தான். முன்னும் பின்னும் அசைத்து ஒரு வழியாய் உருவி எடுத்தான். பொதுக் கதவைத் திறந்து சைக்கிளைப் படிகளில் இறக்கினான். வெது வெதுப்பாகக் காற்று வீசியது. கூடவே சாக்கடை வாசம் எடுத்தது. சைக்கிளில் ஏறி வேகம் வேகமாய் மிதித்தான். ஒவ்வொரு தெருவாய்த் தாண்டித் தாண்டி இருபது தெருக்களையும் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தான். நிலவொளியில் வயல் பயிர்கள் கரு கருவென்று தெரிந்தன. சாலை ஓரத்தில் ஒரு வெள்ளைச் சேலை விரிந்து கிடப்பது போல் வாய்க்கால் தெரிந்தது. தண்ணீர் மட மடவென்று பாய்ந்து போனது. எங்கும் குளிர்ச்சி தெரிந்தது. புதரும் செடி கொடிகளுமாயிருந்த ஒரு இடத்தில் சைக்கிளை நிறுத்தினான். கொத்தாய்ப் புல் வளர்ந்த இடத்தில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்தான். துருவ நட்சத்திரம் பளீரென்று தெரிந்தது. நிலாவைச் சுற்றி மேகம் நிர்மலமாயிருந்தது. காற்றை இழுத்து இழுத்துச் சுவாசித்தான். சுவாசப் பைகளுக்குள் பயிர் வாசனையும் பச்சைக் காற்றும் போய்ப் போய் அடைவதாய் நினைத்துக் கொண்டான். புல் தரை மெத்தென்றிருந்தது. கையைத் தலைக்கு வைத்து மெல்லச் சாய்ந்தான். பையில் கிடந்த நாலைந்து சில்லரைக் காசுகள் புல் தரையில் விழுந்தன. தெரிந்தும் அவைகளை எடுப்பது இப்போது அவசியமில்லாத வேலை போல் தெரிந்தது. எவ்வளவு நேரம் ஆனதென்று தெரியவில்லை. விழித்துப் பார்த்துத் தான் எங்கே இருக்கிறோம் என்பதைச்சரியான ஞாபகத்தில் கொண்டு வந்தான். சூரியன் மப்போடு வந்திருந்தான், வெயில் அவ்வளவில்லை. எழுந்து சைக்கிளில் ஏறினான். வெகு நாளாயிற்று இப்படித் தூங்கி என்று சொல்லிக் கொண்டான். ஊருக்குள் வர வர இவனுக்கு நேரம் புலப்பட ஆரம்பித்தது. கைப்பம்பில் தண்ணீர் அடித்தாளோ, பிள்ளைகள் பள்ளிக் கூடம் போனார்களோ, ஆபீஸில் பேலன்ஸ் oட் இன்றைக்கு வைக்க வேண்டுமே என்கிற ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் வர வர சைக்கிளை வேகமாய் மிதித்தான். 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/77&oldid=463983" இலிருந்து மீள்விக்கப்பட்டது