பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சேதாரம் தனுஷ்கோடி ராமசாமி 'சீதை'ன்னா பேரு அவளுக்குத்தான் செல்லும், சிரிச்சா முகம் பொன் சிந்தும்; வாய் முத்து உதிர்க்கும். சீதேவி மாதரியே அழகாக இருப்பாள். சீதை ஐந்தாவது படிக்கும் போதிருந்தே கெளசல்யா டீச்சர் லீவிலே ஊருக்கு வந்துவிட்டால் அவங்க வீட்டிலேயேதான் கிடப்பாள். அவங்க சாட்சியாபுரம் கான்வென்ட் ஹையர் செக்கண்டரி ஸ்கூலில் பி.எட். டீச்சராக வேலை பார்க்கிறாங்க, அந்த டீச்சருக்கு எல்லா வேலைகளையும் பிரியமாக ஒடி ஒடி செய்வாள். அவங்க நாயக்கமார். நாயக்கமார் தெருவுக்கு அதிகமா இந்தத் தெருபிள்ளைகள் யாரும் போகமாட்டாங்க... ஆனால் சீதை அங்கேயேதான் கிடப்பாள். ராத்திரித்தான் வீடு திரும்புவாள். அந்த டீச்சர் ஊருக்குப்போன பிறகு கூட அவங்களைப் பற்றித்தான் தங்கச்சி ராமுத்தாயிடம் பேசுவாள். அடுத்த லீவிலே அவங்க வர்ற வரைக்கும் இந்த லீவிலே அவங்க சொன்ன கதைகளை யே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டிருப்பாள். அடுத்த லீவுக்கு வந்துட்டாங்கன்னா அப்புறம் அவங்க சொல்ற புதுக்கதைகளைச் சொல்லுவாள். கான்வென்ட் பெண்கள் போடற சீருடை, சடை, டீச்சர்களின் சீருடை, கொண்டை, இறை வணக்கம், இலக்கிய மன்றம், சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, ஆண்டுவிழா, பாட்டு வகுப்பு, தையல் வகுப்பு, எல்லாரும் வரிசையாய்க் கோயிலுக்குப் போவது, சாப்பாடு, அந்நேரம் சொல்ற ஸ்தோத்திரம், அவங்கசாப்பிடற முறை, தட்டுக் கழுவற ஒழுங்கு, தட்டுகளை வைக்கிற அழகு, அங்குள்ள பூக்கள் சொரியும் பன்னீர்ப் பூமரங்கள், இரவில் தூங்கிக் காலையில் விழித்துக் குதிக்கும் தூங்கு மூஞ்சி மரங்கள். இப்படி... 77