பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டு வரைக்கும் எல்லா வகுப்பிலேயும் அக்காள்தான் படிப்பிலே ஃபஸ்ட் இன்ஸ்பெக்டர் வந்த அன்று சார் கேட்ட கேள்விகளுக்கு அவள் டாண் டாண் ன்னு பதில் சொன்னாளாம். பிறகு இன்ஸ்பெக்டரே கேள்வி கேட்க ஆரம்பிச்சாராம். எல்லாப் பிள்ளைகளுக்கும் தெரியாமல் போன கேள்விகளுக்கெல்லாம் கூட அக்காள் பதில் சொல்லிட்டாளாம். கடைசியிலே இன்ஸ்பெக்ட ருக்கும் அவளுக்கும் போட்டி மாதரி வந்திருச்சாம். அவர் மறிச்சு மறிச்சு கேள்வி கேட்டாராம். அக்காள் கவனமாப் பதில் சொல்லிக் கிட்டே வந்தாளாம். மணியடிச்சு பள்ளிக்கூடம் முடிந்த பின்னாடியும் இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தாராம். மற்ற ஆசிரியர்கள், பிள்ளைகள் எல்லாம் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாங்களாம். கடைசியிலே ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டதுக்கு அக்காள் யோசித்து பதில் சொல்லிட்டாளாம். இன்ஸ்பெக்டர் அது தப்புன்னு சொல்லிட்டு வேறு ஒரு விடையைச் சொன்னாராம். இவள் அழுத்திட்டாளாம். இன்ஸ்பெக்டர் சிரிச்சுக்கிட்டே, பரவாயில்லம் மா... உட்காருன்னு எவ்வளவோ சொல்லிப்பாத்தாராம். இவள் கண்ணிர் வடிச்சுக்கிட்டே நின்னாளாம்... “அவள் சொன்ன விடை சரிதான் சார்'ன்னு சொல்லி இன்ஸ்பெக்டர்கிட்டே 'சார்’ புஸ்தகத்தை எடுத்துக்கிட்டுப் போய் காட்டினாராம். இன்ஸ்பெக்டர் புஸ்தகத்தைப் பார்த்துட்டு 'கட' 'கட'ன்னு சிரிச்சிட்டாராம். 'நீ சொன்ன விடைதான் சரி'ன்னு அவர் சொன்னவுடனே, வெளிலேருந்த பையன்கள்ளாம் 'டப' 'டப' என்னு கை தட்டிட்டாங் களாம். சாரும் வகுப்பிலேருந்த ஆம்பளைப் பிள்ளைகளும் பொம்பளப் பிள்ளைகளும் வெளியிலே நின்னுக்கிட்டிருந்த சார்மார்களும் கல கலன்னு சிரிச்சாங்களாம். 'இந்த சின்ன கிராமத்திலே இவ்வளவு புத்திசாலித்தனமான பொம்பளப் புள்ளையப் பார்த்ததிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்"னு சொல்லிக்கிட்டே 'உன் பேரு என்னம்மா?'ன்னு கேட்டாராம். 'சீதை'ன்னு அக்காள் கூச்சத்தோடு சொன்னாளாம். "பொருத்தமான பேரும்மா.... சீதைகளாலும் ராமர்களாலும் தான் புதிய இந்தியாவை உருவாக்க முடியும்... 'னு கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டே வகுப்பை விட்டு வெளியே போனாராம்... 79